5 ஆண்டுகளில் உலக சுற்றுப்பயணம் முடித்து திரும்பிய பாட்டி

Read Time:1 Minute, 29 Second

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பாட்டி ரோசி ஸ்வாலே போப். இவர் 61 வயதில் கடந்த 2003-ம் ஆண்டு உலகப்பயணத்தை மேற்கொண்டார். அவரது 2-வது கணவர் கிளைவ் 73 வயதில் புற்றுநோய்க்கு பலியானதை தொடர்ந்து இந்த நோய் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அவர் உலகப்பயணத்தை மேற்கொண்டார். 12 நாடுகளில் 32186 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்த அவர் 5 ஆண்டுகளுக்கு பிறகு தாய்நாடு திரும்பினார். இந்த பயணத்தின்போது இவர் ஒவ்வொரு நாள் இரவும் சாலையோரங்களில் முகாமிட்டு பிரசாரம் செய்தார். இவர் 1970-ம் ஆண்டு கடலில் படகில் பயணம் செய்தார். அப்போது அவர் நிர்வாணமாக பயணம் செய்து புகழ்பெற்றார். இவருடன் முதல் கணவர் காலின் ஸ்வாலே மகள் ஈவ், ஆகியோரும் பயணம் செய்தனர். இந்த பயணத்தின்போது தான் அவர் மகன் ஜேம்ஸ் பிறந்தான். வருகிற ஆகஸ்டு மாதம் அவர் இன்னொரு 1500 கி.மீ. பயணத்தை தொடங்க திட்டமிட்டு இருக்கிறார்.வேல்சில் உள்ள டென்பி என்ற தன் சொந்த ஊரில் இருந்து அவர் இந்த பயணத்தை தொடங்க இருக்கிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சீனாவில் பெண் போலீசுக்கு பதவி உயர்வு அளிப்பதற்கு எதிர்ப்பு
Next post இங்கிலாந்தில் உள்ள டண்டி நகரில் புகை பிடிப்பதை நிறுத்துவதற்கு வாரம் ரூ.875 உதவிதொகை