ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் பதவியை ராஜினாமா செய்வேன்: சர்வதேச அணுசக்தி கழக தலைவர் தகவல்

Read Time:3 Minute, 0 Second

ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் பதவியை ராஜினாமா செய்வேன் என்று சர்வதேச அணுசக்தி கழக தலைவர் முகமது எல்பராடி கூறினார். ஈரான் அணுசக்தி ஆயுதங்களை வைத்திருப்பதாக அமெரிக்கா தொடர்ந்து கூறி வருகிறது. இதனால் அந்நாட்டின் மீது அமெரிக்கா ராணுவத் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சமும் நிலவி வருகிறது. ஈரான் நாட்டில் அணு ஆயுதங்கள் எதுவும் இருக்கின்றனவா? என்பதை சோதனை செய்யும் பொறுப்பில் ஐ.நா. சபையின் சார்பாக சர்வதேச அணுசக்திக் கழகத் தலைவரான முகமது எல்பராடி இருக்கிறார். அவர் ஈரானில் அணு ஆயுதங்கள் இருப்பதாக கூறப்படுவது பற்றி சோதனைகள் மேற்கொண்டும் வருகிறார். அவர் நேற்று அரபு நாட்டு டெலிவிஷனுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- தற்போது ஈரான் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. இது மாதிரியான சூழ்நிலையில் ஈரான் மீது ராணுவத் தாக்குதல் நடத்தப்பட்டால் அங்கு மேலும் எனது பணிகளைத் தொடர முடியாத நிலை ஏற்படும். அப்போது எனது பதவியை ராஜினாமா செய்து விடுவேன். என்னைப் பொறுத்தவரை ஈரான் மீது ராணுவத் தாக்குதல் நடத்துவது அங்கு நிலைமையை மேலும் மோசமடையச் செய்து விடும். அது இந்தப் பகுதியையே நெருப்புபந்து போல் ஆக்கி விடும். தவிர, தாக்குதல் நடந்தால் இஸ்லாமிய நாடுகள் அனைத்தும் அணுஆயுதங்களைப் பெறும் முயற்சியில் ஈடுபடலாம். இதேபோல் ஈரானில் அணு ஆயுதங்கள் இல்லாத நிலையில் தாக்குதல் நடத்தப்பட்டால், அதற்குப் பின் ஈரானும் அந்நாட்டு மக்களின் முழுஆதரவுடன் அணு ஆயுதங்களை தயாரிக்கத் தொடங்கிவிடும் அபாயம் இருக்கிறது. மேற்கண்டவாறு எல்பராடி கூறினார்.

செறிவூட்டுவது தொடரும்

இந்த நிலையில், ஈரானுக்கான தூதர் அலி அஸ்கார் சுல்தானியா வியன்னா நகரில் கூறும்போது, `உலக நாடுகள் எந்த விதமான பொருளாதார தடையை ஈரான் மீது விதித்தாலும் தொடர்ந்து யுரேனியத்தை செறிவூட்டுவதில் ஈரான் தொடர்ந்து ஈடுபடும். மின்சக்திக்காகத்தான் நாங்கள் யுரேனியத்தை செறிவூட்டுகிறோம்` என்று தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சீனாவில் ஒலிம்பிக் தொடங்கும் நாளில் 9 ஆயிரம் திருமணம்: இப்போதே முன்பதிவு நடக்கிறது
Next post நேபாள மன்னருக்கு ஹிட்லர் அளித்த கார் எங்கே?: நேபாளத்தில் சர்ச்சை