இந்திய பாரம்பரிய மருத்துவ முறையான “ஆயுர்வேதம்” லண்டன் மக்களிடையே மிகுந்த வரவேற்பு

Read Time:1 Minute, 23 Second

இந்திய பாரம்பரிய மருத்துவ முறையான “ஆயுர்வேதம்’ லண்டன் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து, பிரபல இந்திய ஆயுர்வேத நிறுவனமான சாந்திகிராம் தனது புதிய கிளையை லண்டன் செüத்ஹால் பகுதியில் தொடங்கியுள்ளது. இந்தக் கிளையை லேபர் கட்சியைச் சேர்ந்த செüத் ஹால் தொகுதி எம்.பி. வீரேந்திர சர்மா தொடங்கி வைத்தார். இங்கு கேரள பாரம்பரிய முறையான “பஞ்சகர்மா’ சிசிச்சை, தேர்ந்த வல்லுநர்களைக் கொண்டு அளிக்கப்படும் என அந்நிறுவனத் தலைவர் கோபிநாத் நாயர் தெரிவித்தார். எதிர்காலத்தில் லண்டன் முழுவதும் தங்களது கிளையை விரிவுப்படுத்த திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார். அண்மைக் காலமாக, மாற்று மருத்துவத்தை லண்டன் மக்கள்விரும்பி ஏற்க முன்வந்துள்ளதே இத்தகைய சிகிச்சை மையங்கள் அதிகரிக்கக் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிந்திப்பதிலும் ஆண், பெண் வேறுபாடு!
Next post மெக்சிகோ நாட்டில் பயங்கரம்: மதுபானபார் நெரிசலில் சிக்கி, பள்ளி மாணவர்கள் உட்பட 12 பேர் பலி; ஆண்டுவிழாவை கொண்டாடியபோது பரிதாபம்