பெற்றோர் பாலுறவை பார்த்து பாதிக்கப்பட்ட சிறுமி..!!
பெற்றோர் பாலுறவை பார்த்து பாதிக்கப்பட்ட சிறுமி
ப்ளஸ் ஒன் படிக்கும் என் வயது 16. எங்களுக்குப் பெரிதாக வசதியில்லை. ஒரே அறையில்தான் அப்பா, அம்மா, நான் எல்லோரும் துாங்குவோம். நான் தனியாகத் தூங்குவதற்கு வேறு அறைகளும் இல்லை. ஒருநாள் ராத்திரி 12 மணி இருக்கும். என்னவோ சத்தம் கேட்டு, விழித்துக் கொண்டேன்.
அரை இருட்டில் அப்பாவும், அம்மாவும்… அதன் பிறகு என்னால் துாங்க முடியவில்லை. இப்போதெல்லாம் இரவில் அனிச்சையாக விழிப்பு வருகிறது. ஒரு பக்கம் மனசுக்கு உறுத்தலாக இருந்தாலும் இன்னொரு பக்கம் புரியாத ஆர்வம் இருக்கிறது இரவில் சரியாகத் தூங்காமல் பகலில் தூக்கமாக வருகிறது. சரியாகப் படிக்கவும் முடியவில்லை. நான் என்ன செய்ய
உங்கள் பிரச்னை ரொம்பவே தர்மசங்கடமானதுதான். ஆனால் ஒன்று, இது உங்களுக்கு மட்டும் நேர்ந்த மோசமான அனுபவம் அல்ல. உலகெங்கும், தினம் தினம், உங்களைப் போன்ற பலருக்கும் ஏற்படும் ஒரு சாதாரண அனுபவம். இந்த அனுபவத்துக்கு ஒரு படிப்பறிவு இருக்கிறது.
ஆண்-பெண் உறவு பற்றி எதுவுமே தெரியாத குழந்தைப் பருவத்தில் இருந்து, அப்பா-அம்மா உறவு என்றால் என்ன என்று புரிந்து, பக்குவப்படும் “பெரிய மனித” பருவத்துக்கு உங்களைத் தயார்ப்படுத்தும் அனுபவம் இது.
இந்த அனுபவம், ஆரம்பத்தில் அச்சம், ஆர்வம், என்றெல்லாம் உங்களைக் குழப்பி அவஸ்தைக்குள்ளாக்கினாலும், போகப்போக, “சரிதான், வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம்” என்று உங்கள் தாய்-தந்தையரின் தாம்பத்தியத்தைத் திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்ளும் மனமுதிர்ச்சியை உங்களுக்கு ஏற்படுத்திவிடும்.
அதனால் தேவையில்லாத குழப்பம். குற்ற உணர்ச்சி, குறுகுறுப்பு எல்லாவற்றையும் மூட்டை கட்டி விட்டு, அப்பா, அம்மா பக்கம் முதுகைத் திருப்பிப் படுத்துத் துாங்குங்கள். உங்கள் காலமும் ஒருநாள் வரும். அப்போது உங்கள் குழந்தையும் இதே பரந்த மனத்துடன் இருக்க பிரார்த்தியுங்கள். தூக்கமும் வரும். படிப்பும் வரும்.
இவரது பெற்றோரைப் போல, சிங்கிள் பெட்ரூம் வீட்டுக்கே உள்ள இக்கட்டான சூழ்நிலைகளால் அவதிப்படும் பெற்றோருக்கு எல்லாம் ஒன்று சொல்லியே ஆகவேண்டும். ஒரு நாளைக்குத்தான் இருபத்து நான்கு மணி நேரம் இருக்கிறதே… பிள்ளைகள் சதாசர்வகாலமுமா வீட்டிலேயே இருக்கிறார்கள்? காலச் சூழ்நிலையை சற்று அனுசரித்து வாழ்க்கையை இன்னும் நன்றாக “அனுபவிக்கலாமே?“
அண்ணா’ என்றழைக்கும் தோழியிடம் ஐ லவ் யூ சொல்லலாமா?
எனக்கு வயது 28. சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறேன். அயனாவரத்தில் என் வீட்டுப் பக்கத்தில் ஒரு பெண். கல்லுாரி மாணவிதான். என்னை அண்ணா என்று கூப்பிடும்போது, கஷ்டமாக இருக்கிறது. “அப்படிக் கூப்பிடாதே“ என்று கூறிவிட்டால், கோபித்துக் கொண்டு, பேசுவதை நிறுத்திவிடுவாளோ என்றும் தயக்கமாக இருக்கிறது. நான் அவளை விரும்புகிறேன். என்னை “அண்ணா“ என்று அழைக்கும் அவளிடம் நான் “ ஐ லவ் யூ“ சொல்லலாமா? சரிப்பட்டு வருமா?
“அண்ணா“ என்று கூப்பிடுவதால் நீங்கள் அவளுக்கு ஒரிஜினல் அண்ணன் ஆகிவிடமுடியாதே! நீங்கள் அவளது ரத்த சம்பந்தமானவராக இல்லாதவரை எல்லாமே சரிப்படும்தான். ஆனால் உடன்பிறவாத உங்களை, அந்தப் பெண் ஏன் இவ்வளவு அழுத்தம் திருத்தமாக “அண்ணா“ போடுகிறாள்?
சில பெண்கள், “அவன் தப்பா நெனச்சிப்பான்“ என்று அண்ணா போடுவார்கள். சிலர், வீட்டில் உதை விழுமே என்று பழக்கதோஷத்தில், பார்க்கும் இளவயது ஆண்களையெல்லாம் “அண்ணா“ போட்டு வைப்பார்கள். இன்னும் சிலர், “எனக்குத் தப்பான எண்ணம்னு யாரும் நினைச்சிடக்கூடாதே“ என்று ஒரு தற்காப்புக்காக “அண்ணா“ போடுவார்கள். இதையெல்லாம் விட, “அத்தான்“னு கூப்பிட வேற ஆளு இருக்கு. உன் லெவலுக்கு அண்ணாவே போதும் என்கிற எண்ணத்தில் “அண்ணா“ என்பவர்கள்தான் அதிகம்.
உங்கள் ஆள் இதில் எந்த வகை என்பதை குறிப்பறியுங்கள். வெறும் பழக்கதோஷத்தில்தான் அண்ணா போடுகிறாள் என்றால், ஒரு வேளை சரிப்படலாம். ஆனால், “கடலின் ஆழத்தைக் கூட அறிந்து கொள்ளலாம். ஒரு பெண்ணின் மனத்தில் என்ன இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள முடியாது“ என்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? எப்படியோ, உங்கள் முயற்சி வெல்லட்டும்.
எல்லாருக்குமே ‘அந்த ஆசை’ ஒரே அளவில் இருக்குமா?
பாலுணர்வு உந்துதல் எல்லோருக்கும் ஒரே மாதிரி இருக்குமா? அல்லது ஆளுக்கு ஆள், இடத்துக்கு இடம், நேரத்துக்கு நேரம் மாறுபடுமா?
உண்மைதான். கலவி வீரியம் என்பது ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு அளவில்தான் இருக்கும்.
தனி ஒருவருக்குக் கூட சூழ்நிலை, உடல் ஆரோக்கியம், மனநிலை, துணைவரது குணாதிசயம், புறவாழ்வில் நேர்பவை, பிறரது துாண்டுதல், சுய அபிப்ராயம் மாதிரியான பலப்பல விஷயங்களைப் பொறுத்து வெவ்வேறு சமயங்களில் வெவ்வேறு அளவிலான வீரியம் ஏற்படுகிறது.
அதனால்தான் சொல்லி இருக்கிறார் வள்ளுவர், மலரினும் மெல்லியது காமம் என்று!
Average Rating