விம்பிள்டன் டென்னிஸ் 2008 : புதிய போட்டியில் ஷரபோவாவும், இவனோவிச்சும்..
டென்னிஸ் உலகில் புதிய முதல்நிலை வீராங்கனையாக சேர்பியாவின் அனா இவனோவிச் உருவெடுத்துள்ளார். சமீபத்தில் இடம்பெற்ற பிரான்ஸ் பகிரங்கக் டென்னிஸ் தொடரில் பட்டம் வென்ற இவனோவிக், விம்பிள்டன் போட்டிகளில் ரஷ்யாவின் மரியா ஷரபோவாவிற்கு பலத்த சவாலாக விளங்குவார். இதனால் மகளீர் ஒற்றையர் ஆட்டம் விறுவிறுப்பை அதிகரித்துள்ளது. டென்னிஸ் பாரம்பரியம் இல்லாத யூகோஸ்லாவியாவில் (யூகோஸ்லாவியாவில் இருந்து பிரிந்தே 1990களுக்கு பின்னர் சேர்பியா உதயமானது) பிறந்த அனா இவானோவிச், இளம் பருவத்தில் நீச்சல் தடாகத்தில், டென்னிஸ் பயிற்சியை மேற்கொண்டார். யூகோஸ்லாவியாவில் கால்பந்து, கூடைப்பந்து வீராங்கனைகளுக்கு இருந்த முக்கியத்துவம், அப்போது டென்னிஸ் வீராங்கனைகளுக்கு இல்லை. ஆனாலும் மனம் தளராத இவர், தனது டென்னிஸ் கனவில் உறுதியாக இருந்தார். இளம் வயது முதல் சுதந்திரமாக சிந்திக்க, செயல்பட பெற்றோர்களால் அனுமதிக்கப் பட்டார். இதனால் இயல்பாகவே நட்புணர்வுடன் பழகும் குணத்தைப் பெற்றிருந்தார். டென்னிஸ் விளையாட்டின் பரபரப்பான சூழ்நிலைகளில் கூடசக வீராங்கனைகளுடன் சிரித்த முகத்துடன் காணப்படும் இவனோவிக், அமைதியான சுபாவம் கொண்டவர். அதே நேரத்தில் விம்பிள்டன் தொடரில் அவருக்கு மிகுந்த போட்டியாக அமையக் கூடியவர் என்று கருதப்படுகின்ற முன்னாள் முதன்நிலை வீராங்கனையும், விம்பிள்டன் வெற்றியாளருhன ரஷ்யாவின் மரியா ஷரபோவா பத்திரிகையாளர் சந்திப்பில் கூட நிதானத்தை கடைப் பிடிக்கமாட்டார். ஷரபோவாவை விட ஒரு வயது சிறியவரான இவானோவிச் (வயது 20) அதிக வருமானம் பெறும் டென்னிஸ் வீராங்கனையாக தற்போது உருவெடுத்துள்ளார்.
பிரான்ஸ் பகிரங்கக் கிண்ணத்தை வென்றதிலிருந்து அனா இவனோவிச்சிடம் விளம்பர நிறுவனங்கள் தொடர்ந்தும் ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகின்றன. இது மரியா ஷரபோவாவின் வருமானத்தை குறைத்துள்ளது. இந்த நிலையில், விம்பிள்டன் தொடரில் அனா இனோவிச்சை வீழ்த்தும் நோக்கில் ஷரபோவா உத்வேகத்துடன் களமிறங்குவார். ஆயினும், இவனோவிக் அதற்கு சரியான எதிர்ப்பை வழங்குவார் என்று எதிர்பார்க்கலாம்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating