இந்த வார ராசிபலன் (20.06.08 முதல் 26.06.08 வரை)
மேஷம்(அசுவினி, பரணி, கிருத்திகை 1-ம் பாதம் முடிய)
பொது: பண வரவு திருப்திகரமாக இருக்கும். இருப்பினும் செலவுகள் அதிகரிக்கும். மன மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் உற்சாகம், குதூகலத்திற்குக் குறைவிருக்காது. விரோதங்கள் விலகும்.
பெண்களுக்கு: சுபகாரியம் கூட வரும். செலவுகள் அதிகரிக்கும். முயற்சிகளுக்கு நல்ல முன்னேற்றம் காணப்படும். பொருளாதாரம் மேம்படும். அலுவலக சூழல் சாதகமாக இருக்கும்.
வேலை பார்ப்போருக்கு: வேலையில்திருப்தி நிலவும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். எடுத்து காரியத்தில் வெற்றி கிடைக்கும். அலுவலகத்தில் சாதகமான நிலை காணப்படும்.
ரிஷபம் ( கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசிரீஷம் 2-ம் பாதம் முடிய)
பொது: சிறு சிறுதடை ஏற்பட்டு விலகும். கூடுதல் கவனத்துடன் எதிலும் செயல்படுவது நல்லது. வினைகள் அகலும். பொருளாதாரம் மேம்படும். கடன் தொல்லை சரியாகும்.
பெண்களுக்கு: சிறு சிறு பிரச்சினைகள் தோன்றி மறையும். அலைச்சல் அதிகரிக்கும். உடல் நலனில் கவனம் தேவை. பணப் பற்றாக்குறை ஏற்படும். வேலையில் நாட்டம் கூடும்.
வேலை பார்ப்போருக்கு: வேலையில் சில சிரமங்களை சந்திக்க நேரிடும். சக ஊழியர்களிடம் ஒத்துழைப்பு குறைவாக இருக்கும். கூடுதல் கவனத்துடன் எதிலும் ஈடுபடவும்.
மிதுனம் (மிருகசிரீஷம் 3-ம் பாதம் முதல் திருவாதிரை, புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)
பொது: முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். பயணங்களில் கவனம் தேவை. எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பொருளாதாரம் மேம்படும். நண்பர்கள், உறவினர்களால் லாபம் உண்டாகும். வேலையில் பிரச்சினைகள் குறையும்.
பெண்களுக்கு: குடும்பத்தில் அமைதி குலையும். பொறுமை, நிதானத்துடன் எதிலும் ஈடுபடவும். முக்கிய காரியங்களில் நிதானம் கூடுதலாக ேதவை. முக்கிய முடிவுகளில் அவசரம் காட்ட வேண்டாம்.
வேலை பார்ப்போருக்கு: எதிர்பார்த்தது நடக்கும். சக ஊழியர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பதவி உயர்வு, ஊதிய உயர்வை எதிர்பார்க்கலாம். இடமாற்றம் இப்போதைக்கு இருக்காது.
கடகம் ( புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)
பொது: எந்த வேலையையும் முடிக்காமல் ஓய மாட்டீர்கள். பெரியவர்களின் சந்திப்பு உரிய பலனைக் கொடுக்கும். சிறு சிறு தடைகள் வந்து விலகும். சொத்துப் பிரச்சினை சரியாகும். உடல் நலம் சிறப்பாக இருக்கும். பொருளாதாரம் மேம்பாடு அடையும்.
பெண்களுக்கு: குடும்பத்தில் அமைதி, நிம்மதிக்குக் குறைவிருக்காது. மன மகிழ்ச்சி கூடும். சுப காரியம் கூடி வரும். பண வரவு திருப்திகரமாக இருக்கும். சுறுசுறுப்புடன் பணியாற்றுவீர்கள்.
வேலை பார்ப்போருக்கு: வேலையில் பரம திருப்தியுடன் இருப்பீர்கள். ஊதியம் உயரும். வேலைப்பளு குறையும். இடமாற்றம் மகிழ்ச்சி தரும். பதவி உயர்வை எதிர்பார்க்கலாம்.
சிம்மம் (மகம் ,பூரம், உத்திரம் முதல் பாதம் முடிய)
பொது: நினைத்ததை முடிப்பீர்கள். மனதில் தைரியம் கூடும். ரிஸ்க் எடுக்க யோசிக்க மாட்டீர்கள். முயற்சிகளில் ஆக்கம் காட்டலாம். எதிர்பாராத உதவிகள், ஆதரவுகள் வந்து சேரும். பணக் கஷ்டம் தீரும்.
பெண்களுக்கு: எந்தப் பிரச்சினையயும் எளிதில் சமாளிப்பீர்கள். சுப காரியம் கூடி வரும். செலவுகள் சற்றே அதிகரிக்கும். பண வரவு திருப்திகரமாக இருக்கும். வெளியூர் பயணத்தால் லாபம் உண்டாகும். வேலையில் திருப்திகரமாக இருப்பீர்கள்.
வேலை பார்ப்போருக்கு: சக ஊழியர்களிடம் கூடுதல் கவனம் தேவை. சிலருக்கு கூடுதல்வேலைப்பளு ஏற்படும். சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். இடமாற்றம் ஏற்படும். பதவி உயர்வை இப்போது எதிர்பார்க்க வேண்டாம்.
கன்னி ( உத்திரம் 2-ம் பாதம் முதல், அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)
பொது: பணம் கை நிறையப் புழங்கும். அதேசமயம், கடன் தொல்லையும் வந்து சேரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் நிலவும். செலவுகள் கழுத்தை அறுக்கும். வரவுகள் குதிரைக் கொம்பாக இருக்கும்.
பெண்களுக்கு: குடும்பத்தில் புதிய உறுப்பினர் வருகை இருக்கும். சுப காரியச் செலவுகள் காத்திருக்கிறது. எதிர்பாராத விருந்தினர் வருகையால் உவகை ஒரு பக்கமும், செலவுகள் மறுபக்கமும் நிற்கும்.
வேலை பார்ப்போருக்கு: வேலையில் கூடுதல் கவனம் தேவை. வேலைப்பளு அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். செலவுகளும் கூடவே காத்திருக்கும்.
துலாம் ( சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)
பொது: எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிப்பீர்கள். மனதில் உற்சாகம் நிறைந்திருக்கும். சந்தோஷச் செய்தி வந்து சேரும். அனைவருக்கும் பிடித்தது போல நடந்து கொள்வீர்கள்.
பெண்களுக்கு: குடும்பத்தில் சந்தோஷ நிகழ்வுக்கு வாய்ப்புண்டு. கோவில் காரியங்களுக்கு அதிகம் செலவழிக்க நேரிடும். பொருளாதாரம் சற்றே மேம்படும். பண வரவு திருப்திகரமாக இருக்கும். அலுவலகத்தில் சந்தோஷத் திருப்பத்திற்கு வாய்ப்புண்டு.
வேலை பார்ப்போருக்கு: சக ஊழியர்கள் நல்ல ஆதரவுடன் இருப்பார்கள். மேலதிகாரிகளின் ஆதரவும் அபரிமிதமாக இருக்கும். முக்கிய முடிவுகளை எடுக்கலாம்.
விருச்சிகம் ( விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம். கேட்டை முடிய)
பொது: தள்ளிப் போட்டு வந்த காரியம் நிறைவேறும். சொத்து சம்பந்தமான சிக்கல்களுக்குத் தீர்வு கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. பண வரவு திருப்திகரமாக இருக்கும். சுப காரியம் கூடி வரும்.
பெண்களுக்கு: விரும்பியது நடக்கும். வேண்டியது நிறைவேறும். வீட்டில் உற்சாகம் நிலவும்.மனதில் மகிழ்ச்சி குடி கொள்ளும். புத்துணர்ச்சியோடு செயல்படுவீர்கள்.
வேலை பார்ப்போருக்கு: வேலையில் நிம்மதி நிலவும். இதுவரை இருந்து வந்த தடங்கல்கள் சரியாகும். புதிய வேலைக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வார இறுதியில் சந்தோஷச் செய்தி தேடி வரும்.
தனுசு (மூலம், பூராடம். உத்திராடம் முதல் பாதம் முடிய)
பொது: எதிலும் கவனமாக இருப்பீர்கள். கடமைகளில் தவற மாட்டீர்கள். நியாயத்தின் பக்கம் நிற்பீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களால் நல்லது நடக்கும். நீண்ட நாள் நண்பர்களால் நல்லது நடக்கும்.
பெண்களுக்கு: கனவுகள் நிறைவேறும். அலுவலகத்தில் நல்ல பெயர் கிடைக்கும். குடும்பத்தில் ஏற்றம் காணப்படும். சுப காரியப் பேச்சுக்கள் நல்ல திசையில் செல்லும். செலவுகளை கட்டுப்படுத்துவது அவசியம்.
வேலை பார்ப்போருக்கு: வேலையில் அதிருப்தி குறையும். கேட்டது கிடைக்கும். நினைத்தது நிறைவேறும். பதவி உயர்வை எதிர்பார்க்கலாம். இடமாற்றம் உங்கள் விருப்பப்படி நடக்கும்.
மகரம் ( உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)
பொது: காரியங்களில் திருப்புமுனை ஏற்படும். நண்பர்களால் நல்லது நடக்கும். பணப் புழக்கம் சிறப்பாக இருக்கும். மனப் புழுக்கம் குறையும். வருத்தங்கள் நீங்கும். சொத்து வாங்கும் யோகம் உண்டு.
பெண்களுக்கு: குடும்பத்தில் அமைதி, அன்பு, சந்தோஷம், குதூகலம் நிரம்பியிருக்கும். சுப காரியம் கூடிவரும். சந்தோஷ நிகழ்வுகளுக்கு வாய்ப்புண்டு. கணவருடன் நல்லுறவு நீடிக்கும்.
வேலை பார்ப்போருக்கு: வேலையில் சிறப்புடன் செயல்படுவீர்கள். மேலதிகாரிகள், சக ஊழியர்களிடமிருந்து ஒத்துழைப்பு கிடைக்கும். அலைச்சல் அதிகரிக்கும். பணி நிமித்தம் வெளியூர்ப் பயணம் உண்டாகும்.
கும்பம் ( அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)
பொது: இடையூறுகள் அகலும். இன்னல்கள் நீங்கும். மனதிலும், குடும்பத்திலும் நிம்மதி நிலவும். அலைச்சல் குறையும். கேட்டது கிடைக்கும். நினைத்தது நடக்கும்.
பெண்களுக்கு: செலவுகள் அதிகரிக்கும். தொலைதூரத்திலிருந்து நற் செய்தி வந்து சேரும். உடல் நலனில் அக்கறை தேவை. உறவினர்களால் சந்தோஷம் உண்டாகும். மனதுக்குப் பிடித்த காரியம் நடந்தேறும்.
வேலை பார்ப்போருக்கு: வேலையில் சந்தோஷத் திருப்பத்தை எதிர்பார்க்கலாம். மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த தகவல் விரைவில் வந்து சேரும்.
மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
பொது: செயல்களில் வெற்றி உண்டாகும். சந்தோஷ செய்தி தேடி வரும். பணப் புழக்கம் திருப்திகரமாக இருக்கும். நண்பர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புண்டு. குடும்பத்தில் சிறு குழப்பம் ஏற்பட்டு சரியாகும்.
பெண்களுக்கு: திறமைகளை கண்டறிந்து அதற்கு ஊக்கம் கொடுக்கலாம். அலைச்சலைக் குறைக்க முயற்சியுங்கள். சேமிப்பு அதிகரிக்கும். வருமான் பெருகும்.
வேலை பார்ப்போருக்கு: வேலையில் நிம்மதியாக இருப்பீர்கள். ரிஸ்க் எடுத்தால் சில வெற்றிகளை அடைய முடியும். சம்பள உயர்வு, பதவி உயர்வு உள்ளிட்டவற்றை எதிர்பார்க்கலாம்.
Average Rating