பொங்கலுக்கு ரிலீஸாகும் 6 படங்கள்..!!

Read Time:3 Minute, 5 Second

பண்டிகைகளில் பெரிய நடிகர்கள் படங்களையும் மற்ற நாட்களில் சிறிய பட்ஜெட் படங்களையும் திரையிடும்படி தயாரிப்பாளர்கள் சங்கம் ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து அடுத்த மாதம் (ஜனவரி) 14-ந்தேதி பொங்கல் பண்டிகை விருந்தாக சில பெரிய படங்களும் ஓரிரு சிறிய படங்களும் திரைக்கு வர உள்ளன.

தானா சேர்ந்த கூட்டம், ஸ்கெட்ச், குலேபகாவலி, கலகலப்பு-2, மதுர வீரன், ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் ஆகிய 6 படங்களையும் பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டு உள்ளனர். இவற்றின் படப்பிடிப்புகள் முடிந்து குரல் பதிவு, இசை சேர்ப்பு, கிராபிக்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடக்கிறது

தானா சேர்ந்த கூட்டம் படத்தில் சூர்யா-கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்துள்ளனர். விக்னேஷ் சிவன் இயக்கி உள்ளார். தெலுங்கிலும் இந்த படம் ‘கேங்க்’ என்ற பெயரில் வெளியாகிறது. அதிரடி கதையம்சம் உள்ள படமாக தயாராகி உள்ளது. விக்னேஷ் சிவன் ஏற்கனவே நானும் ரவுடிதான் படத்தை இயக்கி பிரபலமானவர். எனவே இந்த படமும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகி இருக்கிறது.

ஸ்கெட்ச் படத்தில் விக்ரம்-தமன்னா ஜோடியாக நடித்துள்ளனர். விஜய் சந்தர் டைரக்டு செய்துள்ளார். அதிரடி திகில் படமாக தயாராகி உள்ளது. குலேபகாவலி படத்தில் பிரபுதேவா-ஹன்சிகா ஜோடியாக நடித்துள்ளனர். கல்யாண் டைரக்டு செய்துள்ளார். அதிரடி, நகைச்சுவை படமாக தயாராகி உள்ளது. எம்.ஜி.ஆர். நடித்து 1955-ல் வெளியான குலேபகாவலி படத்தின் தலைப்பில் இந்த படம் வருகிறது.

கலகலப்பு-2 படத்தில் ஜீவா, ஜெய், சிவா, நிக்கி கல்ராணி ஆகியோர் நடித்துள்ளனர். சுந்தர்.சி இயக்கி உள்ளார். குஷ்பு தயாரித்து உள்ளார். 2012-ல் வெளியாகி வசூல் குவித்த கலகலப்பு படத்தின் இரண்டாம் பாகமாக வந்துள்ளது. முழு நீள நகைச்சுவை படம். ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படத்தில் விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ளனர். ஆறுமுக குமார் இயக்கி உள்ளார். நகைச்சுவை திகில் படமாக தயாராகி உள்ளது.

இந்த படத்தின் டிரெய்லரில் இடம்பெற்ற ராமன், ராவணன் பற்றிய வசனம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தீ விபத்திலிருந்து தப்பிக்க 23 மாடி குடியிருப்பின் பால்கனியில் தொங்கிய நபர் – வைரலாகும் வீடியோ..!!
Next post உள்ளூராட்சித் தேர்தல் ‘பலப்பரீட்சை’..!! (கட்டுரை)