பல் சொத்தையைக் குணமாக்க புதிய வழி..!!

Read Time:6 Minute, 50 Second

பல் சொத்தையின் பாதிப்புகளை ஆஸ்பிரின் மாத்திரையால் மாற்ற முடியும் என்றும், பல்லின் சொத்தையைச் சரிசெய்யும் சிகிச்சையான ‘நிரப்புதலை’ நம்முடைய பல்லாலேயே செய்துவிட முடியும் என்றும் வடக்கு அயர்லாந்து விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

பல் சொத்தைப் பகுதியில் குணமாக்குதலை இது மேம்படுத்தி, பல்லில் உள்ள குருத்தணுக்களை தூண்டுவதாக குயின்ஸ் பல்கலைக்கழகத்தின் தொடக்க ஆய்வில் தெரியவந்துள்ளது.

பல்லில் வரக்கூடிய பொதுவான நோயான பல் சொத்தை, பல் நாளங்களில் வீக்கம் ஏற்படச் செய்து பல் வலியை உருவாக்குகிறது. வடக்கு அயர்லாந்தில் 15 வயது வரையானவர் களில் 72 சதவீதத்தினர் பல் சொத்தையால் பாதிக்கப்பட்டிருப்பது ஆய்வில் தெரியவந்திருக்கிறது.

இது இங்கிலாந்தில் 44 சதவீதமாகவும், வேல்சில் 63 சதவீத மாகவும் உள்ளது. வலி நிவாரணியாக பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வரும் மாத்திரைதான் ஆஸ்பிரின். வீக்கத்தைத் தடுக்கின்ற மருத்துவ குணம் இதில் உள்ளது. தலைவலி, மாதவிடாய் வலி, தசைவலி போன்றவற்றில் இருந்து விடுபடுவதற்கு இது பயன்படுத்தப்படுகிறது. ஆஸ்பிரின் மாத்திரையின் விலையும் குறைவுதான்.

பற்கள் இயற்கையாகவே குணமாவதற்கு மிகவும் குறைவான திறன்களையே கொண்டுள்ளன. உள் பல்கூழ் வெளியே தெரிந்தால், எனாமலுக்கு கீழே மெல்லிய உட்பல்லுறை அடுக்கை அவற்றால் உருவாக்க முடியும். ஆனால், இதனால் பெரிய பல் பிரச்சினைகளை தடுக்க இயலாது.

பல் சிதைவுக்கு அதை நிரப்பிவிடுவதுதான் தற்போதைய சிகிச்சையாக உள்ளது. இந்த பல்லின் வாழ்நாளில் பலமுறை இதனை மாற்றிவிட்டு, மீண்டும் நிரப்பவேண்டிய நிலை உள்ளது.

பேராசிரியை இக்லஸ் எல் கரீம், குயின்ஸ் பல்கலைக்கழகத்தின் மருத்துவம், பல்மருத்துவம் மற்றும் உயிர்மருத்துவ அறிவியல் கல்லூரியில் மூத்த விரிவுரையாளராக உள்ளார்.

பற்களில் காணப்படும் பல் குருத்தணுக்களை மையப்படுத்தியும், சேதமடைந்த பற்களில் நிரப்புதல் சிகிச்சையை மாற்றிவிட்டு, பற்களே தாமாக சரிப்படுத்தும் திறன்களை பல்மருத்துவர் எவ்வாறு மேம்படுத்திட முடியும் என்பதாக அவருடைய ஆய்வு அமைந்தது.

இங்கிலாந்து வாய் மற்றும் பற்கள் ஆய்வு ஆண்டு மாநாட்டில், இந்த ஆய்வு முடிவுகள் சமர்பிக்கப்பட்டன. ஆஸ்பிரின் மாத்திரையானது குருத்தணுக்களின் செயல்பாடுகளை மேம்படுத்த முடியும். அதன் மூலம், இழந்துவிட்ட பல் அமைப்பை மீண்டும் பெறுமளவுக்கு தானாகவே சரிசெய்ய உதவக்கூடும் என்று அந்த மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.

“பற்கள் தாமாகவே குணமாக்கிக்கொள்ளக்கூடிய சிகிச்சை முறை ஒன்றை வடிவமைத்துகொள்ள முடியும் என்று நம்புகிறோம்” என இக்லஸ் எல் கரீம் கூறினார். “தற்போதைய மருத்துவ சிகிச்சையான பற்களில் நிரப்புதலை ஒரேயடியாக முடிவுக்குக் கொண்டுவராமல், படிப்படியாக புதிய சிகிச்சை முறை வரும்” என்கிறார் அவர்.

புதிய உள் பல்கூழை உருவாக்கத் தேவைப்படக்கூடிய மரபணுக்களைத் தூண்டும் ஒரு பொருளாக ஆஸ்பிரின் மாத்திரையை இனம்காண முந்தைய பெருமளவிலான ஆய்வுத் தகவல்களை விஞ்ஞானிகள் தொகுத்துள்ளனர்.

“உள் பல்கூழை மீண்டும் உருவாக்குவது மற்றும் நிரப்புதல் சிகிச்சை அளிப்பதை மாற்றுவதற்கு, ஆஸ்பிரினை பற்களுக்கு வழங்குவதை எப்படிச் செய்யப் போகிறோம் என்பதுதான் அடுத்த செயல்பாடாக அமையும்” என்று இக்லஸ் எல் கரீம் கூறுகிறார்.

ஆஸ்பிரினை பற்களுக்கு வழங்குவது என்பது அதை பல் சிதைவு ஏற்பட்டுள்ள பற்களில் எளிதாக போட்டுவிடுவதாக இருக்கப்போவதில்லை.

சிகிச்சை சோதனைகளுக்குப் பிறகு, அதனை பற்களில் வைப்பதற்கான ஒரு கருவியை வடிவமைக்க சக பணியாளர் களோடு முயற்சி மேற்கொள்வதுதான் அடுத்தகட்டமாக அமையும் என்று கரீம் விளக்கியுள்ளார். ஆஸ்பிரின் மாத்திரை ஏற்கனவே உரிமம் பெற்ற ஒரு மருந்தாக இருப்பது, இந்தப் புதிய சிகிச்சையை வடிவமைக்க உருவாக்குவதற்கு உதவும்.

“10 அல்லது 20 ஆண்டுகள் காலத்தில் வரக் கூடியதைப் பற்றி நாம் பேசவில்லை. வெகு விரைவாக நோயாளிகளோடு சிகிச்சை சோதனை நடைபெறலாம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

“நாம் சந்தித்துவரும், பல் தொடர்பான பெரிய பிரச்சினைகளில் ஒன்றுக்கு நம்முடைய அணுகுமுறையை மாற்றும் பெரும் வாய்ப்பு உள்ளது. இந்தப் புதிய அணுகுமுறை பற்களின் வாழ்நாளை அதிகரிப்பது மட்டுமல்ல, இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவைகள் மற்றும் உலக அளவிலான சுகாதார பராமரிப்பு அமைப்புகளுக்கு பெருமளவில் செலவைக் குறைப்பதாகவும் அமையும்” என்று டாக்டர் எல் கரீம் தெரிவித்திருக்கிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வைரலாகும் அம்பானி வீட்டு திருமண அழைப்பிதழ்: விலை 1.5 லட்சமாம்..!! (வீடியோ)
Next post லவ்வர்ஸ் டே ஸ்பெஷலாக விஜய் சேதுபதி திரிஷாவின் ட்ரீட்..!!