மறுப்போருக்கு நிவாரண உதவி நிறுத்தம்

Read Time:1 Minute, 26 Second

Trinco.3.jpgதிருகோணமலை மாவட்டத்திலிருந்து, போர் காரணமாக இடம்பெயர்ந்து அம்பாறை மாவட்டத்தில் தஞ்சமடைந்திருப்பவர்களை உடனடியாக அவர்களின் சொந்த இடங்களுக்கு திருப்பி அனுப்புமாறும், திரும்பிச் செல்ல மறுப்போறுக்கான நிவாரண உதவிகளை உடன் நிறுத்துமாறும் அம்பாறை மாவட்ட அரச அதிபர் எச்.எம். ஹேரத் அபயவீர தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர், மாவட்டத்தில் திருகோணமலை அகதிகள் தங்கியிருக்கும் பிரதேச செயலர்களுக்கு கடுமையான உத்தரவை விடுத்துள்ளார். இவரது இந்தப் உத்தரவுகளை பிரதேச செயலகங்கள், கிராம சேவகர்கள் ஊடாக அகதிகளுக்கு தெரியபடுத்தி வருகின்றனர்.

கடந்த ஆறு மாதங்களுக்கு மேல் நடைபெற்று வரும் பேரினால் திருகோணமலை, மூது}ர், கிளிவெட்டி, கந்தளாய், பட்டித்திடல், சம்ப10ர் பகுதிகளில் வசித்த 426 தமிழ், முஸ்லிம் குடும்பங்கள் அம்பாறை மாவட்ட 12 கரையோரப் பிரதேச செயலகப் பிரிவுகளில் உறவினர், நண்பர்கள் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கியூபா கடும் தாக்கு: “உலக நாடுகளின் மீது அமெரிக்கா சர்வாதிகாரம்”்
Next post போலந்தில் நாய்கள் அணிவகுப்பு