விஜயனின் 500-வது படத்தில் அட்வான்ஸ் வாங்காமல் நடித்த அரவிந்த்சாமி..!!
ஹர்ஷினி மூவிஸ் தயாரிக்கும் பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
அரவிந்த் சாமி, அமலா பால் இணைந்து நடிக்கும் பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தை இயக்குனர் சித்திக் இயக்குகிறார். மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற பாஸ்கர் தி ரஸ்கல் படத்தின் ரீமேக்காக உருவாகி வருகிறது. இப்படத்திற்கு அம்ரேஷ் கணேஷ் இசையமைத்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (13-2-17) நடைபெற்றது.
விழாவில் நடிகர் அர்விந்த் சாமி, அமலா பால், இயக்குனர் சித்திக், ரோபோ சங்கர், ஆஃப்தாப்ஷிவ்தசானி, நடிகை மீனா மற்றும் இசையமைப்பாளர் அம்ரேஷூடன் மூத்த நடிகையும், அம்ரேஷின் அம்மாவுமான ஜெயச்சித்ரா ஆகிய திரைபிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பேசிய போது, ” பாஸ்கர் ஒரு ராஸ்கல், ஒரு நல்ல எண்டர்டெய்னர் மூவியாக உருவாகியுள்ளது. இப்படத்திற்கு அட்வான்ஸ் தொகை வாங்கமலேயே அரவிந்த் சாமி இப்படத்தில் நடித்து கொடுத்தார். இயக்குனர் சித்திக் தமிழ் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றவாறு திரைக்கதையில் சில மாற்றங்களை செய்துள்ளார். படம் நன்றாக வந்துள்ளது. இசையமைப்பாளர் அம்ரிஷ் கணேஷ் படத்திற்கு நன்றாக இசையமைத்துள்ளார். பாடல்களும் அருமையாக வந்துள்ளது.” என்று கூறினார்.
நடிகர் அர்விந்த் சாமி, ” இந்த படத்தில் என்னை தேர்வு செய்ததற்காக இயக்குனர் சித்திக்கிற்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படத்தில் ஆக்ஷன் காட்சிகளுக்கு சில ரிஸ்க்குகளை எடுத்துள்ளேன். ஸ்டண்ட் மாஸ்டர் விஜயன் அவர்களின் 500 ஆவது படத்தில் நடித்தது எனக்கு பெருமையாக இருக்கிறது. படத்தில் ரோபோ மற்றும் சூரியின் காமெடி காட்சிகள் அருமையாக வந்துள்ளது, அவர்களுடன் நானும் சேர்ந்து சிறிது காமெடிக்கு முயற்சி செய்துள்ளேன். படம் நன்றாக வந்துள்ளது உங்கள் அனைவருக்கும் கண்டிப்பாக பிடிக்கும் என்று நம்புகிறேன்.” என்று அவர் கூறினார்.
ஜெயச் சித்ரா பேசிய போது, ” அம்ரேஷ் எனது மகன், இப்போது மூன்றாவது முறையாக இந்த பெருமைமிக்க மேடையில் நிற்க செய்துள்ளான். மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில் இவரது இசை அனைவராலும் பாரட்டப்பட்டது. தற்போது இந்த மேடையில் இருந்த அறிஞர்கள் பலரும் அவரை பாராட்டியுள்ளனர், பெருமையாக உள்ளது. இந்த படம் வெற்றியடைய எனது வாழ்த்துக்கள்” என்று அவர் கூறினார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating