புளொட் தலைவர் உமாமகேஸ்வரனின் கொலையாளிகளின் நிலையென்ன??

Read Time:1 Minute, 54 Second

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) ஸ்தாபகரும், செயலதிபருமான அமரர் உமாமகேஸ்வரன் அவர்களின் படுகொலையின் முக்கிய சூத்திரதாரியான ஆச்சிராஜன் என்பவன் தமிழ்நாட்டில் மாரடைப்பினால் மரணமடைந்துள்ளான். 1989ம் ஆண்டு ஜூலை 16ம் திகதி கொழும்பு பம்பலப்பிட்டியில் வைத்து உமாமகேஸ்வரன் அவர்கள் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து கொலையுடன் தொடர்புடைய முக்கிய சூத்திரதாரி என்று கூறப்படும் இவன் தப்பிச் சென்று தமிழ்நாட்டில் வசித்து வந்துள்ளான். அந்நிய சக்திகளின் வார்த்தைகளை நம்பி அமரர் உமாமகேஸ்வரன் அவர்களின் படுகொலைக்கு சூத்திரதாரியான மேற்படி ஆச்சிராஐன் தூபமிட உமாமகேஸ்வரன் அவர்களின் மெய்ப் பாதுகாவலராக இருந்து நம்பிக்கைத் துரோகியாக மாறி உமாமகேஸ்வரன் அவர்களைப் படுகொலை செய்த ராபின் எனும் ஐயாத்துரை உதயகுமார் என்பவன் 1994ம் ஆண்டு நவம்பர் மாதமளவில் சுவிஸ் நாட்டில் வைத்து இனந்தெரியாத ஆயுததாரிகளால் படுகொலை செய்யப் பட்டமையும் அதேபோல் அமரர் உமாமகேஸ்வரன் அவர்களின் படுகொலையுடன் சம்பந்தப்பட்டதாகக் கருதப்படும் எஸ்.ஆர் அல்லது தராக்கி எனும் சிவராமும் சில வருடங்களுக்கு முன் கொழும்பில் வைத்து இனந்தெரியாத ஆயுததாரிகளால் படுகொலை செய்யப் பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post போர் விமானம் மீது பறக்கும் தட்டு மோதியதா?: காயத்துடன் விமானி உயிர் தப்பினார்
Next post தகவல் தொழில் நுட்பத்திற்கான பூங்காவை இலங்கையில் அமைக்க இந்தியா திட்டம்