பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் வெள்ளம்

Read Time:1 Minute, 47 Second

பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் அந்த பகுதியிலிருந்து வெளியேற்றப் பட்டு வருகின்றனர். சீனாவில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக 9 மாகாணங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை 65 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த மாதம் 85 ஆயிரம் பேரின் உயிரை பறித்த பூகம்பம் தாக்கிய சிச்சுவான் மாகாணத்தில் உள்ள வென்சுவான் என்ற இடத்திலிருந்து 70 ஆயிரம் பேர் அப்புறப்படுத்தப் பட்டிருப்பதாக பெய்ஜிங் நியூஸ் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிசு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு அப்புறப்படுத்தப் பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே சீனாவில் மேலும் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் சிச்சுவான் மாகான மக்கள் பீதியில் உள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உலகத் தமிழர் இயக்கம் கனடாவில் தடை!
Next post ஜெயஸ்ரீ தம்பியை மணந்தார் கனிகா