பெண்கள் விரும்பும் கல.. கல.. கண்ணாடி வளையல்..!!

Read Time:6 Minute, 20 Second

பச்சிளம் குழந்தைகள் முதல் பாட்டிகள் வரை அனைத்து வயது பெண்களின் கரங்களையும் அழகாக்கும் ஆபரணம், வளையல்கள். கடைவீதிகள், திருவிழாக்களுக்கு செல்லும் பெண்கள் அங்கு வண்ண நிறங்கள், டிசைன்களில் குவிந்து கிடக்கும் வளையல்களை வாங்காமல் வீடு திரும்பமாட்டார்கள். வளையல்கள் நமது கலாசாரத்துடன் பின்னிப் பிணைந்தவை. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பெண்கள் வளையல் அணிந்திருக்கிறார்கள் என்பது அகழ்வாய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அேத நேரத்தில் இன்றைய காலகட்டத்தில் பேஷன் உலக புதுமைக்கு ஈடுகொடுக்க வளையல்கள் புதியரக டிசைன்களில் மின்ன தொடங்கி இருக்கின்றன.

வளையல் அணிவதிலும் கவனிக்க வேண்டிய விஷயங்கள் இருக்கின்றன. ஸ்டைலுக்காக ஒரே ஒரு வளையல் மட்டும் அணிவது, ஒரே ஒரு கையில் மட்டும் வளையல் அணிவது போன்றவை கூடாதாம். வளையல்களை தளர்வாக அணிவதும் கூடாது. ஆனால் சிறிய அளவுகளில் இருந்து பெரிய அளவுகள் வரை அடுக்கடுக்காக அணியலாம். வளையல்கள் கைகளில் ஒட்டி இதமாக வருடிக்கொண்டிருக்க வேண்டும். வளைகாப்பில் கண்ணாடி வளையல்களை அணிவார்கள். அதன் ஓசை தாய்க்கும், வயிற்றில் இருக்கும் சிசுவுக்கும் சந்தோஷத்தை கொடுக்கும். மன அழுத்தத்தை குறைக்கும். கைகள் அசைவின்போது வளையல்கள் எழுப்பும் ஓசை குழந்தைக்கு கேட்டுக்கொண்டே இருக்கும். அது அதன் மூளையை சுறுசுறுப்படைய செய்யும். கேட்கும் திறனை அதிகப்படுத்தும். தாய்-சேய் இடையே நெருக்கமான பந்தத்தையும் ஏற்படுத்தும்.

உடுத்தும் ஆடை ரகங்களுக்கு ஏற்ப பொருத்தமான வளையல்களை பெண்கள் தேர்ந்தெடுத்து அணிகிறார்கள். புடவை உடுத்தும்போது கை நிறைய வளையல்களை அடுக்கலாம். ஆடைகளில் இடம் பெறும் டிசைன்களுக்கு இணையான, அலங்கார வேலைப்பாடுகளையும் தேர்ந்தெடுத்து பயன்படுத்தலாம். அது பார்ப்பதற்கு அழகாக இருக்கும். பட்டுச்சேலைக்கு கற்கள் பதித்த வளையல்கள் கூடுதல் அழகு சேர்க்கும். விசேஷ நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது ஜொலிக்கும் வளையல்களை அணிந்தால் எடுப்பாக இருக்கும். உயரமான பெண்கள் மெல்லிய வளையல்களை அணிய வேண்டும். குட்டையான பெண்களுக்கு பட்டையான வளையல்கள் பொருத்தமாக இருக்கும்.

கண்ணாடி வளையல்களில் ஒவ்வொரு நிறமும் ஒவ்வொரு விதத்தில் மகத்துவம் கொண்டவை. மஞ்சள் நிறம் மகிழ்ச்சியை தரும், நல்ல எண்ணங்களை விதைக்கும், மங்கலம் சேர்க்கும். பச்சை நிறம் மனதை சாந்தப்படுத்தும், அதிர்ஷ்டம் தேடி தரும். ஊதா நிறம் சுயமாக சிந்தித்து முடிவெடுக்கும் ஆற்றலை அதிகப்படுத்தும். சிவப்பு நிறம் எதையும் எதிர்கொள்ளும் சக்தியை கொடுக்கும். ஆரஞ்சு நிறம் வெற்றியை தேடித் தரும். வெள்ளை நிறம் இனிய தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுக்கும். கருப்பு நிறம் மன தைரியத்தை அதிகரிக்கும். பச்சை மற்றும் சிவப்பு நிற வளையல்கள் சுப நிகழ்ச்சிகளில் அதிகம் இடம் பிடித்து உற்சாகத்தை வரவழைக்கும்.

கண்ணாடி வளையல்களில் இருந்து வெளிப்படும் ஓசை எதிர்மறையான எண்ணங்களை விரட்டியடிக்க உதவும். மனதை தெளிவடைய செய்யும். மூளையின் செயல்பாடுகளை சுறுசுறுப்பாக்கும். ரத்த ஓட்டத்தையும் இதய துடிப்பையும் சீராக வைத்திருக்க உதவும். வளையல்கள் பெண்களின் மனவலிமையையும் அதிகரிக்கும். வயதான பெண்கள் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக நீண்டநாட்கள் வாழ்ந்ததற்கும், வளையலுக்கும் தொடர்பு இருக்கிறது. வளையல் அணிவது உடல் வலிமையை மேம்படுத்துவதோடு அவர்களை நோய் தாக்கங்களில் இருந்தும் பாதுகாத்திருக்கிறது.

ஆன்மிக ரீதியாகவும் கண்ணாடி வளையல் மகத்துவம் பெற்றிருக்கிறது. கண்ணாடி வளையல்களில் இருந்து வெளிப்படும் ஓசை, தீய சக்திகளை விரட்டி அடித்து தேவியின் அருள் கிடைக்க செய்யும் என்ற நம்பிக்கை இருக்கிறது. கெட்ட சக்திகளில் இருந்து பெண்களை காக்கும், திருஷ்டியை போக்கும் என்ற கருத்தும் நிலவுகிறது. வளையல் அணியும் பெண்களின் கணவரின் ஆயுள் அதிகரிக்கும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் திருமணத்தின்போது மணப்பெண் சிவப்பு வண்ண புடவையும் கண்ணாடி வளையலும் அணிவது மங்களகரமான சடங்காக பின்பற்றப்படுகிறது. கண்ணாடி வளையல்கள் உடைந்திருந்தாலோ, கீறல் விழுந்திருந்தாலோ அதை அணியக்கூடாது என்பது மரபு.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புது புது ‘உடலுறவு’ சுக‌ங்களை அனுபவிக்க…!!
Next post தனுஷின் தோட்டாவை தயார் செய்யும் கவுதம் மேனன்..!!