ஊடகவியலாளர் 27 பேருக்கு அச்சுறுத்தல் என்பது பொய்த்தகவல் – அடித்து மறுக்கிறார் தகவல் துறை அமைச்சர்

Read Time:1 Minute, 46 Second

அரசோ அல்லது பாதுகாப்பு அமைச்சோ ஊடகவியலாளரின் விவரங்கள் எதையும் திரட்டவில்லை ஆனால் ஊடகவியலாளர் 27 பேருக்கு அச்சுறுத்தல் உள்ளது என வெளியான செய்தியானது ஐக்கிய தேசிய கட்சியினால் தயாரிக்கப்பட்டதாகும் இவ்வாறு ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார் கடந்த வியாழனன்று கொழும்பில் நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது ஊடகவியலாளர்களின் பெயர் விபரங்களை நாம் திரட்டவில்லை 27 ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியிருக்கின்றனர் என்று செய்தி வெளியாகியுள்ளது. இது முற்றிலும் தவறானதாகும் இந்த நடவடிக்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாயவின் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் செயலாகும் ஐக்கிய தேசிய கட்சிக்குள் ஏற்பட்டுள்ள உட்பூசல்கள் குறித்து செய்தி வெளியாவதை தடுப்பதற்காகவே இவ்வாறான செய்திகள் திட்டமிட்டு வெளியிடப்படுகின்றன ஜனநாயகத்தை மதிக்கின்ற அரசு இவ்வாரான கீழ்தரமான செயற்பாடுகளை என்றுமே மேற்கொள்ளாது என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உலகத்தமிழர் இயக்கத்திற்கு கனடாவில் தடை!
Next post ஹாலிவுட் ‘ஷகீலா’ ஜென்னா ஜேம்சனின் வாழ்க்கை திரைப்படமாகிறது!