கைகளை மிருதுவாக்கும் மெனிக்யூர்..!!

Read Time:2 Minute, 39 Second

ஹாட் ஆயில் மெனிக்யூர் பெரிய ஸ்பாக்களில் செய்யப்படும் கைக்கான ஸ்பா. இது விரல்களை ஆரோக்கியமாக வளரச் செய்யும். கரடுமுரடான கைகள் பஞ்சு போல் மாறும். கைகளில் உள்ள வறட்சியை போக்கி ஊட்டம் அளிக்கும். இந்த ஸ்பாவை வீட்டிலேயே செய்யலாம். எப்படி செய்யலாம் என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

சூரிய காந்தி எண்ணெய், ஆலிவ் எண்ணெய் – சம அளவு
பாதாம் எண்ணெய் – 5 ஸ்பூன்
விட்டமின் ஈ மற்றும் ஆலிவ் எண்ணெய் – சம அளவு
விட்டமின் ஈ கேப்ஸ்யூல்
ரோஜா இதழ்கள்

முதலில் எல்லா எண்ணெய்களையும் ஒன்றாக கலக்குங்கள். பிறகு விட்டமின் ஈ கேப்ஸ்யூலை உடைத்து அதிலுக்கும் எண்ணெயை கலவை எண்ணெயில் போடவும்.

இந்த கலவையை குறைந்த தீயில் அடுப்பை வைத்து வெதுவெதுப்பாக சூடேற்றுங்கள் அல்லது மைக்ரோ வேவில் வைத்தால் 8 நொடிகள் சூடுபடுத்தவும்.

பிறகு இந்த எண்ணெயில் ரோஜா இதழ்களை போடவும். சில துளி லாவெண்டர் எண்ணெயை ஊற்றவும். இதில் உங்கள் கைகளை மூழ்க வையுங்கள். வெதுவெதுப்பான சூட்டில் உங்கள் கைகளுக்கு இதமாகவும் ரத்த ஓட்டம் பாயவும் உதவும்.

சூடு ஆறியது மறுபடியும் சூடு படுத்தி கைகளை விடவும். 20 நிமிடங்கள் ஆனதும் கைகளை வெளியே எடுத்து கைகளில் உள்ள எண்ணெயை கை முழுவதும் மசாஜ் செய்யுங்கள்.

10 நிமிடம் கழித்து கைகளை கடலைமாவு போட்டு கழுவலாம். உங்கள் கைகளா என ஆச்சரியப்படும் அளவிற்கு உங்கள் கைகள் மிருதுவாகவும் வசீகரமாகவும் இருக்கும்.

மாதம் ஒருமுறை அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை இந்த ஹாட் ஆயில் மெனிக்யூர் செய்தால் நகங்கள் ஆரோக்கியமாக வளரும். மசாஜ் செய்யும்போது அந்த அரோமா எண்ணெய் சருமத்தால் உறிஞ்சப்பட்டு ரத்த ஓட்டம் அதிகரிக்கும் சுருக்கம் வராமல் கைகளை இளமையாக ஆரோக்கியமாகவும் பராமரிக்கலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எந்த நேரங்களில் தாம்பத்தியம் வைத்து கொள்ளலாம்..?..!!
Next post இதை நம்பமுடியவில்லை! அமலாபாலை ஆச்சர்யப்படவைத்த பிரபல இயக்குனரின் மனைவி..!!