பனிக்காலத்தில் உதட்டின் வறட்சியை போக்கும் வழிகள்..!!

Read Time:2 Minute, 13 Second

முகம் என்ன தான் அழகாக இருந்தாலும், கூட முகத்தின் அழகை எடுத்து காட்ட உதவுவது அழகிய உதடுகள் தான். சிலருக்கு பனிக்காலத்தில் உதடுகள் கருப்பாக மாறி வறண்டு இருக்கும். இது ஒரு சில ஊட்டச்சத்து குறைபாடுகள் மற்றும் சில பழக்கங்களால் ஏற்படுகிறது. இந்த பகுதியில் உங்களது வறண்ட உதட்டை பாதுகாப்பது எப்படி என்று பார்க்கலாம்.

1. பனிக்காலத்தில் நாள்தோறும் உதடுகளின் மேல் வெண்ணெய் தடவி வந்தால் வறண்ட உதடுகள் மாறி வழவழப்பான அழகான உதடாகும்.

2. கொத்துமல்லி இலைகளின் சாற்றை எடுத்து தினமும் இரவு படுக்கைக்குச் செல்லும்முன் உதடுகளில் தடவி வந்தால் உதடு சிவப்பாகும்.

3. தேங்காய் எண்ணெயில் அரை டீஸ்பூன் சாதிக்காய் பொடியைச் சேர்த்து குழைத்து உதடுகளின் மேல் தடவி வந்தால் உதடுகள் சிவந்து, பளபளப்பாக காட்சியளிக்கும். வெடிப்புகள் வராது.

4. பெட்ரோலியம் ஜெல்லி உதடுகளை மென்மையாக்க உதவும் மிக சிறந்த பொருளாகும். தினசரி பெட்ரோலியம் ஜெல்லியை உதடுகளில் தடவி வந்தால் உதடுகள் மென்மையாக மாறும். ஈரப்பதத்துடன் இருக்கும்.

5. வாரம் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு உதடுகளை வெதுவெதுப்பான மற்றும் குளிர்ந்த தண்ணீரால் ஒத்தடம் கொடுத்து வந்தால் அவை ரோஜா போல மென்மையாக மாறும்.

6. உதடுகளைக் கடிக்கும் பழக்கம் சிலருக்கு உண்டு. அது தவிர்க்கப்படவேண்டிய பழக்கம். அதனால் உதடுகள் வறண்டு போகவும், நிறம் மாறி அசிங்கமாகக் காட்சியளிக்கவும் கூடும். எனவே இது தவிர்க்கப்பட வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இதுவரை யாரும் அறியாத இந்திய அரசர்களின் அந்தப்புர அந்தரங்க இரகசியங்கள்..!!
Next post சமூக வலைத்தளத்தில் வைரலான ஆத்விக் அஜித்..!!