ரசிகர்கள் சார்பாக சிம்புவுக்கு கோரிக்கை வைத்த தனுஷ்..!!

Read Time:2 Minute, 18 Second

சந்தானம் நடிப்பில் உருவாகி இருக்கும் `சக்க போடு போடு ராஜா’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் நடிகர் தனுஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு படத்தின் இசையை வெளியிட்டார்.

இதில் தனுஷ் பேசும் போது,

“சிம்பு அழைப்பு விடுத்ததாலேயே இந்த விழாவில் கலந்து கொண்டிருக்கிறேன். அதேபோல் நான் விழாக்களுக்கு அழைப்பு விடுத்தால் அவரும் வருவார். அவரும் நானும் நல்ல நட்புடன் தான் உள்ளோம். மற்றவர்கள் கூறுவது போல் எனக்கும் அவருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. எங்களுக்கு நடுவில் இருப்பவர்களுக்குள் தான் பிரச்சனை உள்ளது. அவர்கள் தான் எங்களுக்கு இடையில் பிரச்சனைகளை ஏற்படுத்தி வருகின்றனர். எனினும் நாங்கள் நட்புடன் தான் இருக்கிறோம். ஏறக்குறைய 15 வருட நட்பு எங்களுடையது.

நான் இங்கு வந்தபோது சிம்புவின் ரசிகர்கள் எனக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அதேபோல் என் விழாக்களுக்கு அவர் வரும்போது, எனது ரசிகர்களும் அவருக்கு இதேபோன்ற வரவேற்பை அளிப்பார்கள். அனைத்து நடிகர்களுமே அவர்களது ரசிகர்களுக்காக மட்டுமே படம் பண்ணவில்லை. அனைவரும் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் படத்தில் நடிக்கிறார்கள்.

சிம்பு தனது ரசிகர்களுக்காக ஆண்டுக்கு இரண்டு திரைப்படங்களாவது நடிக்க வேண்டும். அது உங்கள் கடமை. உங்கள் ரசிகர்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்” என தனுஷ் கூறினார்.

இந்த விழாவில் சந்தானம், சிம்பு, தனுஷ், யுவன் சங்கர்ராஜா, இயக்குனர் ராஜேஷ் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இறப்பு சான்றிதழ் பெற தாமதமானதால் குழந்தையின் உடலை பிரிட்ஜில் வைத்த தாய்..!!
Next post கூட்டமைப்பின் வெற்றியை உறுதி செய்த பேரவை.!! (கட்டுரை)