கைகளின் கருமையை போக்கும் வழிமுறைகள்..!!
பெண்கள் தங்களின் முக அழகுப் பராமரிப்புக்கு அடுத்து, அதிகக் கவனம் செலுத்துவது கைகளுக்குத்தான். வளையல், மோதிரம், மருதாணி, நெயில் பாலிஷ், வெயில் காலத்தில் கிளவுஸ், குளிர் காலத்தில் மாய்ஸ்சரைசர் என அழகுபடுத்திக்கொள்வார்கள், பாதுகாத்துக்கொள்வார்கள். உங்கள் உடலில் இளமை விலகி, முதுமை நெருங்குவதை உங்கள் கைகளைப் பார்த்தே அறிந்துகொள்ளலாம். சில இயற்கை வழிமுறைகளில் உரிய கவனம் கொடுத்தால், இளமைத் தோற்றத்தை நீட்டிக்கச் செய்யலாம்.
சூழலின் தட்பவெப்பத்துக்கு ஏற்ப சருமத்தின் தன்மை எண்ணெய்ப்பசை, வறட்சி என்று மாறிக்கொண்டேஇருக்கும். ஆனால், உங்கள் கைகள் எல்லா சீதோஷ்ண நிலைகளிலும் வறட்சியாக இருந்தால், தட்பவெட்பம் தாண்டி, ஆரோக்கியத்தில் பிரச்னையென்று அறிய வேண்டும்.
உடலுக்குத் தேவையான நீர்ச்சத்துக் குறைவது, சருமப் பராமரிப்பின்மை என அதற்கான காரணங்களை அறிந்து கவனம் கொடுக்க வேண்டும். சிலருக்கு, அடிக்கடி கை கழுவிக்கொண்டேயிருக்கும் பழக்கத்தால்கூட கைகள் வறண்டுபோகலாம். கைகளில் வறட்சி நீண்ட காலம் நீடித்தால், சருமம் சுருங்கத் தொடங்கும். இதனால் உங்கள் கைகள் உங்கள் வயதைவிட உங்களை மூப்பாகக் காட்டும்.
வறண்ட கைகளுக்குக் கற்றாழை மூலப்பொருள் கொண்ட க்ரீம்களைப் பயன்படுத்தலாம். மாய்ஸ்சரைசர் பயன்படுத்தும்போது லோஷனாக இல்லாமல் க்ரீமாகப் பயன்படுத்துங்கள். லோஷனைவிட க்ரீம் சற்று கெட்டியாக இருக்கும் என்பதால் கைகளில் நீண்ட நேரம் நீடிக்கும்.
அதிக நேரம் வெயிலில் இருக்க நேரும்போது, சில பெண்களுக்கு அது கைகளில் கரும்புள்ளிகளை ஏற்படுத்தும். இதற்கு வீட்டிலேயே இருக்கும் சிறந்த மருந்து பால். பாலை காட்டனில் தோய்த்தெடுத்து உங்கள் கைகளில் தடவி 15 நிமிடங்கள் கழித்துக் குளிர்ந்த நீரால் துடைத்து எடுங்கள். தொடர்ந்து செய்துவர, கரும்புள்ளிகள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையும்.
அதிக தூரப் பயணம், இரு சக்கர வாகனப் பயணம் போன்ற காரணங்களால் சில பெண்களுக்குச் சூரிய ஒளியின் பாதிப்பு கைகளில் அதிகம் வெளிப்படும். பொதுவாகக் கைகளில் அதிக அளவில் சூரிய ஒளிக்கதிர்கள் படும்போது, அது தன் ‘எலாஸ்டிக்’ தன்மையைக் கொஞ்சம் கொஞ்சமாக இழக்க ஆரம்பிக்கும். இதனால் சருமத்தில் தளர்ச்சி ஏற்படும். இதனை ஆரம்பகட்டத்திலேயே தவிர்க்க, தினமும் வெளியில் செல்லும் முன் சன்ஸ்கிரீன் பயன்படுத்துங்கள்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating