பொங்கல் களத்தில் பிரபுதேவா..!!
சூர்யாவின் `தானா சேர்ந்த கூட்டம்’, விஷாலின் `இரும்புத்திரை’, விக்ரமின் `ஸ்கெட்ச்’, விமலின் `மன்னர் வகையறா’ உள்ளிட்ட படங்கள் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிரபுதேவா நடிப்பில் உருவாகி இருக்கும் `குலேபகாவலி’ படமும் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு ரிலீசாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுமுக இயக்குநர் எஸ்.கல்யாண் இயக்கி இருக்கும் இந்த படத்தில் பிரபுதேவா – ஹன்சிகா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரேவதி, ஆனந்த்ராஜ், மன்சூர் அலி கான், சந்தியா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தை அறம் படத்தை தயதாரித்த கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் சார்பில் ராஜேஷ் தயாரித்துள்ளார். மேலும் எம்.ஜி.ஆர் நடிப்பில் கடந்த 1955-ஆம் ஆண்டு வெளியான `குலேபகாவலி’ படத்தின் தொடர்ச்சியாக இந்த படம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
விவேக் – மெர்வின் இசையில் பாடல்கள் விரைவில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து படத்தின் டிரைலரும் வெளியாக இருக்கிறது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating