விமானத்தில் கொடுக்கப்படும் உணவு உப்பு சப்பில்லாமல் இருப்பதற்கு என்ன காரணம்?..!!

Read Time:2 Minute, 29 Second

பொதுவாக நாம் தரையில் செல்லும் வாகனங்களில் பயணிப்பதற்கும், விமானத்தில் பயணிப்பதற்கும் பல்வேறு வேறுபாடுகள் உள்ளது.நாம் தரையில் செல்லும் வாகனங்களில் பயணம் செய்யும் போது, நாம் சாப்பிடும் உணவுகளில் எந்தவிதமான மாற்றங்களும் தெரிவதில்லை.

ஆனால் விமானத்தில் நீண்ட தூரம் பயணிக்கும் போது, அதில் கொடுக்கப்படும் உணவுகளை நம்மால் தவிர்க்க முடியாது.எனவே விமானத்தில் வழங்கப்படும் உணவுகளை வாங்கி சாப்பிடும் போது அது சில நேரங்களில் உப்பு சப்பில்லாமல் இருப்பது போல நமக்கு தோன்றும்.

அதற்கு காரணம் விமானமானது, அதிக உயரத்தில் பறப்பதால், நுகர்வு திறனும், சுவை உணரும் திறனும் நமக்கு குறைவாக இருக்கும்.

எனவே விமானத்தில் கொடுக்கப்படும் உணவுகளை நாம் சாப்பிடும் போது, உவர்ப்பு, புளிப்பு, கசப்பு, இனிப்பு போன்ற நான்கு சுவைகளை உணரும் சக்திகள் நமது நாவிற்கு குறைந்துவிடுகிறது.விமானத்தில் பயணிக்கையில் நமது நாவின் சுவைகள் குறைவதற்கு என்ன காரணம்?

விமானமானது, அதிக உயரத்தில் பறக்கும் போது, விமானத்தின் உள்பகுதியில் ஈரப்பதம் மற்றும் காற்றழுத்தம் வெகுவாக குறைந்து விடுகிறது.இதனால் நாம் விமானத்தில் சாப்பிடும் போது, நமது நாவிற்கு சுவை உணர் திறன் குறைந்து உணவுகள் உப்பு சப்பில்லாமல் இருக்கிறது.

எனவே சில நேரத்தில், விமானத்தில் வழங்கப்படும் உணவுகளில் அதிகமாக உப்பு மற்றும் காரம் சேர்த்து வழங்கப்படுகிறது.மேலும் விமானத்தில் உள்ள காற்றழுத்தம் காரணமாக உணவு பாதிக்கப்படாமல் இருக்க பேக்கேஜ் செய்தும் குளிரூட்டப்பட்டு, பின் அனைவருக்கும் பரிமாறும் போது அந்த உணவுகளை சூடுபடுத்தி கொடுக்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்த உறுப்புகள் இல்லையென்றாலும் உயிர் வாழலாம்..!!
Next post பெண்கள் சுயஇன்பம் காண்பது…!!