மம்மி மூலம் ரீஎன்ட்ரி ஆகும் அஜித் – விக்ரம் நாயகி..!!
தமிழ் சினிமாவில் தரமான படங்களை தயாரித்து வருபவர் ஜேஎஸ்கே எனும் ஜே.சதீஷ்குமார். தற்போது இவரது ஜேஎஸ்கே பிலிம் கார்ப்பொரேஷன் தயாரிப்பில் ஹாரர் த்ரில்லராக உருவாகியுள்ள படம் ‘மம்மி’. இப்படத்தை லோஹித் என்ற இளம் வயது இயக்குனர் இயக்கியுள்ளார்.
இந்தப்படத்தில் கதையின் நாயகியாக மைய கதாபாத்திரத்தில் நடிகை பிரியங்கா த்ரிவேதி நடித்துள்ளார். அஜித், விக்ரம் ஆகியோருடன் கதாநாயகியாக நடித்த இவர் நீண்ட இடைவெளிக்குப்பிறகு பிறகு ரீ என்ட்ரி ஆகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மகளாக பேபி யுவினா நடிக்கிறார். பா.விஜய்யின் பட்டர்பிளை, அஜித்தின் ‘வீரம்’ என பல படங்களிலும் மற்றும் நூற்றுக்கும் அதிகமான விளம்பரங்களிலும் நடித்தவர் தான் பேபி யுவினா. இவர்களுடன் கிறிஸ்துவ பாதிரியாராக முக்கிய கேரக்டரில் ‘கோலிசோடா’ மதுசூதனன் நடித்துள்ளார்.
கோவாவில் வசிக்கும் ஒன்பது மாத கர்ப்பிணியான தாய்க்கும் அவரது ஆறுவயது மகளுக்கும் நடக்கும் நிகழ்வுகள் தான் இந்தப்படத்தின் கதை. ஒரு பங்களா, அதற்குள் பேய், அதன் பழிவாங்கும் போக்கு, அதற்கு ஒரு பூர்வ ஜென்ம கதை என ஹாரர் படங்களுக்கே உரிய வழக்கமான பார்முலாவில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக ஹாலிவுட் பாணியில் எமோஷனல் ஹாரர் படமாக இந்தப்படம் உருவாகி இருக்கிறது.
‘ரிச்சி’ ‘நிமிர்’ படங்களுக்கு இசையமைத்துள்ள அஜனீஸ் லோகநாத் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். பிரபல ஒளிப்பதிவாளர் எச்.சி.வேணு ஒளிப்பதிவு செய்கிறார்.
படம் பற்றி இயக்குனர் லோஹித் கூறுகையில், “கோவாவில் நடைபெற்ற உண்மைச்சம்பவத்தின் அடிப்படையில் இந்தப்படம் தயாராகியுள்ளது. மிகக்குறைந்த கதாபாத்திரங்களை கொண்டு பாட்டு, சண்டை, காமெடி இல்லாமல், அதேசமயம் இரண்டு மணி நேர மிரட்டலான ஹாரர் படமாக இது தயாராகியுள்ளது. நல்ல கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே சதீஷ்குமாரிடம் இந்தக்கதையை சொன்னதும் அவருக்கு ரொம்பவே பிடித்துப்போய்விட்டது.. இந்தப்படத்திற்காக கோவாவில் 3௦ லட்ச ரூபாய் செலவில் பிரமாண்ட செட் போட்டு படமாக்கப்பட்டுள்ளது. ஒரே கட்ட படப்பிடிப்பாக இந்தப்படத்தின் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளோம்” என்றார்.
ஹாரர் படங்களில் தனித்துவம் மிக்க படமாக உருவாக்கி இருக்கும் இந்தப்படத்தின் டீசர் விரைவில் வெளியாக இருக்கிறது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating