மூலிகை டீ குடிப்பவர்கள் கவனிக்க வேண்டியவை..!!

Read Time:2 Minute, 48 Second

மூலிகை டீயை பருகுவதற்கு நிறைய பேர் விரும்புகிறார்கள். மூலிகை டீ பருகுவதிலும் கவனிக்க வேண்டிய விஷயங்கள் இருக்கின்றன. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.

* மூலிகை டீயின் சுவைக்காக சர்க்கரை சேர்ப்பதை கூடுமானவரை தவிர்க்க வேண்டும். உடலில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதற்காகத்தான் மூலிகை டீ பருகும் பட்சத்தில் சர்க்கரை சேர்ப்பது பொருத்தமாக இருக்காது. சர்க்கரைக்கு மாற்றாக தேன் சேர்த்து பருகலாம். உடல் பருமனை குறைப்பதற்கு முயற்சிப்பவர்கள் தேன் கலந்து பருகுவது நல்ல பலனை கொடுக்கும். சூடாக தயாரிக்கப்பட்ட மூலிகை டீயில் ஒருபோதும் தேன் கலந்துவிடக்கூடாது. மிதமான சூடாக இருக்கும்போதுதான் தேன் கலக்க வேண்டும்.

* பெரும்பாலான மூலிகை டீயில் துளசி இடம் பெற்றிருக்கிறது. அதனுடன் பால் சேர்த்து பருகுவதை தவிர்க்க வேண்டும். பாலில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடல் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும். ஆதலால் உடல் எடையை குறைக்கும் நோக்கத்தில் இருப்பவர்கள் பால் சேர்ப்பதை அறவே தவிர்க்க வேண்டும்.

* மூலிகை டீயை அதிக சூடாகவோ அல்லது குளிர்ச்சியான நிலையிலோ பருகக்கூடாது. மிதமான சூட்டில் பருகுவதே சிறந்தது. அதிலும் பித்தம் சார்ந்த பிரச்சினை உடையவர்கள் ஓரளவு மிதமான சூட்டில் அருந்துவதே நல்லது.

* பெரும்பாலானவர்கள் காபியோ, டீயோ அளவுக்கு அதிகமாக தயார் செய்துவிட்டால் சில மணி நேரம் கழித்து மீண்டும் அதனை சூடுபடுத்தி குடிப்பார்கள். அதுபோல் மூலிகை டீயை ஒருபோதும் மீண்டும் சூடுபடுத்தி பருகக்கூடாது. அப்படி பருகினால் மூலிகையில் உள்ள சத்துக்கள் உடலுக்கு கிடைக்காது.

* பித்தம் சம்பந்தமான பிரச்சினை உடையவர்கள் கோடை காலங்களில் மூலிகை டீ பருகுவதை தவிர்ப்பது நல்லது. மற்ற நேரங்களிலும் அடிக்கடி பருகுவதை தவிர்க்க வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post படுக்கையறை வீடியோக்கள் லீக் ஆனதால் ராய் லட்சுமி அதிர்ச்சி..!!
Next post அங்கு எனக்காக ஒருத்தனும் வரமாட்டான்! பிக்பாஸ் சினேகனுக்கு கொடுத்தது?..!! (வீடியோ)