கண் திருஷ்டியை கண்டுபிடிப்பது எப்படி? அதை சரிசெய்வது எப்படி?..!!

Read Time:3 Minute, 19 Second

பெரியவர்கள் நமக்கு உடலிலோ மனதளவிலோ கஷ்டப்படும் போது கண் திருஷ்டி பட்டிருக்கு சுத்தி போடனும் என்று சொல்லுவதுண்டு.

கண்டு பிடிக்கும் முறைகள் :

திடீரென சோர்வாகவும் உடை கிழிந்தும் கருப்புக்கறை பட்டோ அவ்வாறு நிகழலாம்.ஏதேனும் வீட்டு பிரச்சனை, தடைகள், பண இழப்பு, நஷ்டம், பிரிவுகள் போன்றவை நடக்க நேரிடும்.திருஷ்டி உள்ளவர்களுக்கு தேவையற்ற கனவுகளும், தூக்க இல்லாமல் இருத்தல், எண்ணங்களில் மாற்றம் போன்றவையும் நடக்கலாம்.

திருஷ்டி கழிக்கும் முறைகள் :திருஷ்ழி கழிக்க தகுந்த நேரம் மாலை பொழுதாகும். செவ்வாய் ஞாயிறு போன்ற கிழமைகளில் திருஷ்டியை கழிக்கலாம். அவ்வாறு செய்யும் நபர்கள் அவரைவிட மூத்தவராக இருக்க வெண்டும்.

ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீரூற்றி பூக்களை மிதக்கவிட்டு வீட்டி வாசலிலோ வீட்டிற்கு வருபவரின் கண்படுமாறு வைக்க வேண்டும். காலின் கட்டை விரலில் கருப்பு மை வைத்தால் திருஷ்டி அண்டாது.ரோஜா செடியின் முட்கள் கண் திருஷ்டியை போக்கும் செடியாகும். வீட்டின் வாசலில் அதை வளர்த்து வரலாம்.

மேலும் பூசணிக்காய், இயற்கைத் தாவரங்கள், வாழைமரம், செடி கொடிகள், அறுவறுப்பான பொம்மைகளை தொங்க விடலாம்.தங்கள் வீட்டிலோ அலுவலகத்திலோ மீன் வளர்ப்பவர்கள் கண் படாத இடத்தில் வைத்தால் நல்லது.

எலுமிச்சை, பச்சைமிளகாய், கற்றாழை போன்றவற்றை கயிரில் கட்டி வீட்டின் வாசலில் வளர்பிறை வெள்ளிகிழமை அன்று தொங்க விடலாம்.கடுகு, உப்பு, 3 மிளகாய், படிகாரக் கல்லில் திருஷ்டிக்கு ஆளான நபரை கிழக்கே பார்த்து வலமிருந்து இடமாகவும் இடமிருந்து வலமாகவும் மூன்றுமுறை தலைமுதல் பாதம் வரை இறக்கி செய்தால் திருஷ்டி நீங்கும். உப்பு, கடுகு, மிளகாயை சுற்றிவிட்டு அடுப்பில் போட்டுவிட வேண்டும்கு

ழந்தைகளுக்கு அப்படியிருக்க செப்புக்காசை கையில் கட்ட வேண்டும். பாத்திரத்தில் என்ணெய்யை ஊற்றி முகமுழுதும் தெரியுமாறு மூன்று முறை பார்க்க வேண்டும்.

சிலரின் உடலின் அலர்ஜி காரணமாகவும் திருஷ்டி படகூடும், அதனால் குளிக்கும் நீரில் உப்பை சேர்த்து குளிக்கலாம்.இவையெல்லாம் செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக் கிழமையில் செய்ய வேண்டும்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜூலி எல்லாம் ஓரமா போங்க… வைரலாகும் கல்பனா அக்காவின் வெர்ஷன்..! இது வேற லெவல் பாஸ்..!! (வீடியோ)
Next post குதவழி உடலுறவால் ஏற்படும் உடலநலக் கெடுதல்கள்..!!