கால்சியச் சத்து குறைந்தால் ஏற்படும் பாதிப்புகள்..!!

Read Time:2 Minute, 18 Second

நம்மைத் தாக்கும் நோய்களும், உடல் பாதிப்புகளும் பல்வேறு அறிகுறிகளை வெளிப்படுத்துகின்றன. அவற்றை சரியாகப் புரிந்துகொண்டு உஷாரானால், பாதிப்பில் இருந்து நம்மைக் காப்பாற்றிக்கொள்ள முடியும். உதாரணமாக, நமது விரல்களின் கிரீடங்களான நகங்களும், உடல்நல பாதிப்பு அறிகுறிகளை வெளிப்படுத்துகின்றன.

நகங்கள் உடைவது, நகங்களில் தோல் உரிவது போன்ற அறிகுறிகள், உடலில் கால்சியச் சத்துக்குறைபாட்டைக் குறிக்கும்.

கால்சியச்சத்துக் குறைந்தால் அடிக்கடி சதை இறுக்கம் ஏற்படும். அதைத் தொடர்ந்து, தசைப் பிடிப்பு அல்லது வலியை உணர நேரிடலாம்.

மனஇறுக்கம், அதிக உடல் சோர்வு போன்றவை கால்சியச்சத்துக் குறைபாட்டால் ஏற்படும்.

கால்சியம் உடம்பில் குறைவாக இருக்கும்போது, அதன் விளைவாக நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு, ஞாபக மறதி உண்டாகும்.

உணவில் அதிகமாக உப்பு சேர்த்து சாப்பிடுபவர்களுக்கு கால்சியம் சத்தின் அளவு குறையும்.

‘காபீன்’ நிறைந்த காபியை ஒரு நாளைக்குப் பலமுறை குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு கால்சியம் குறையும்.

செரிமானப் பிரச்சினை உள்ளவர்கள் சோடா, செயற்கைக் குளிர்பானங்கள் பருகுவதைத் தவிர்க்க வேண்டும். அவற்றின் வேதித்தன்மை, நம் உடலில் கால்சியச் சத்தைப் பாதிக்கும்.

நமது எலும்புகள், பற்கள், நரம்புகள், தசைகள் ஆகியவை ஆரோக்கியமாக இருப்பதற்கு கால்சியச் சத்து மிகவும் அவசியம்.

கால்சியம் குறையும்போது நாம் பல்வேறு பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும். எனவே நம் உடலில் அதன் அளவை கவனமாகப் பராமரித்திடுவோம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முதன் முறையாக பிரமாண்ட கலை நிகழ்ச்சிக்கு வருகிறாரா அஜித்?..!!
Next post மெர்சல் பாடலை பாடிய பிக்பாஸ் ஹரீஸ்..!!