இலங்கையில் இரு மதத்தினரிடையே மோதல்: 4 பேர் காயம் – பெண் உள்பட 19 பேர் கைது..!!

Read Time:1 Minute, 37 Second

இலங்கை மக்கள் தொகையில் 70 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் புத்த மதத்தினர் ஆவர். அங்கு இஸ்லாம் மதத்தினரும் 9 சதவீதம் உள்ளனர். இந்த இரு பிரிவினருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது.

குறிப்பாக புத்த மதத்தினரை, மதம் மாற்றி வருவதாகவும், அவர்களின் தொன்மை வாய்ந்த பகுதிகளை சேதப்படுத்துவதாகவும் முஸ்லிம்கள் மீது புத்த மதத்தை சேர்ந்த ஒரு பிரிவினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இதனால் கடந்த சில மாதங்களாக இரு பிரிவினர் மத்தியில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.

இந்த நிலையில் தெற்கு கடற்கரை பகுதியான கிந்தோட்டாவில் புத்த மடாலயம் ஒன்றை இஸ்லாமியர்கள் தாக்குவதாக நேற்று முன்தினம் சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவியது. இதைத்தொடர்ந்து இரு பிரிவினருக்கு இடையே மோதல் வெடித்தது. இதில் 4 பேர் காயமடைந்தனர்.

இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்திய போலீசார் 19 பேரை கைது செய்தனர். இதில் வதந்தி பரப்பிய பெண் ஒருவரும் அடங்குவார். பிரச்சினைக்குரிய பகுதிகளில் தீவிர பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கூந்தல் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் கடுகு எண்ணெய்..!!
Next post முதன் முறையாக பிரமாண்ட கலை நிகழ்ச்சிக்கு வருகிறாரா அஜித்?..!!