வீட்டிற்கு திருட வந்த 2 வாலிபர்கள்… இளம்பெண் கொடுத்த இன்ப அதிர்ச்சி..!!

Read Time:1 Minute, 40 Second

திருப்பூரில் பட்டப்பகலில் வீடு புகுந்து திருடிய வாலிபர்களை துணிச்சலுடன் தாக்கி பொலிசாரிடம் ஒப்படைத்த பெண்ணை அப்பகுதி மக்கள் பாராட்டியுள்ளனர்.

>திருப்பூர் பி.என்.ரோடு பாண்டியன் நகரை சேர்ந்தவர் செல்வகுமார், இவரது மனைவி கஸ்தூரி (28), அந்த பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில் வேலை செய்து வருகிறார்.

வழக்கம் போல நேற்று காலை வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றார். மீண்டும் மதியம் வேலை முடித்து வீட்டுக்கு வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு வீட்டில் 2 வாலிபர்கள் பீரோவை உடைத்து நகையை எடுத்துக்கொண்டிருந்தனர்.

இதனை பார்த்த கஸ்தூரி, வீட்டில் இருந்த உருட்டுக்கட்டையை எடுத்து 2 வாலிபர்களையும் சரமாரியாக தாக்கினார்.

இதில் வலி தாங்க முடியாமல் வாலிபர்கள் கதறினர். இந்த சத்தத்தை கேட்டு பொதுமக்கள் வீட்டின் முன்பாக திரண்டனர்.

அவர்கள் வாலிபர்களை பிடித்து பொலிசில் ஒப்படைத்தனர். பட்டப்பகலில் வீடு புகுந்து திருடிய வாலிபர்களை துணிச்சலுடன் பிடித்த பெண்ணை அப்பகுதி மக்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நானும் நயன்தாரா போல அந்த மாதிரி படங்களில் நடிக்கிறேன் – அமலாபால்..!!
Next post பத்மாவதி படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல்..!!