பத்மாவதி படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல்..!!

Read Time:2 Minute, 8 Second

ராஜஸ்தான் மாநிலத்தில் சித்தூரை ஆண்ட ராணி பத்மினியின் வாழ்க்கையை மையமாக கொண்டு ‘பத்மாவதி’ என்ற படம் தயாராகி அடுத்த மாதம் 1-ந் தேதி வெளியிடப்பட உள்ளது. இந்த படத்துக்கு ராஜபுத்திர வம்சத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ‘பத்மாவதி’ திரைப்படத்துக்கு தணிக்கை சான்றிதழ் பெறுவதற்காக படத்தின் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி அதை மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்துக்கு கடந்த வாரம் அனுப்பி இருந்தார்.

ஆனால் திடீர் திருப்பமாக சான்றிதழ் விண்ணப்பத்தில் குறைகள் இருப்பதாக கூறி அந்த விண்ணப்பத்தை இயக்குனருக்கு சான்றிதழ் வாரியம் திருப்பி அனுப்பி உள்ளது. ஆனால் அதில் என்ன குறை என்பது குறித்து அதிகாரிகள் தெரிவிக்க மறுத்துவிட்டனர். இதனால் அந்த படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

இது குறித்து ‘பத்மாவதி’ படத்தின் தயாரிப்பு நிர்வாகி அஜித் ஆந்த்ரே கூறுகையில், ‘எங்கள் விண்ணப்பத்தில் சிறு குறைகள் இருப்பதாக மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் திருப்பி அனுப்பியது உண்மை தான். நாங்கள் அதனை களைந்து மீண்டும் விண்ணப்பிக்க உள்ளோம். எங்கள் படத்துக்கு எதிராக கிளம்பி இருக்கும் சர்ச்சைக்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. திட்டமிட்டபடி படம் வெளியாகும். யாரும் எங்கள் படத்தை தடுத்து நிறுத்த முடியாது’ என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வீட்டிற்கு திருட வந்த 2 வாலிபர்கள்… இளம்பெண் கொடுத்த இன்ப அதிர்ச்சி..!!
Next post தொகுதி நிர்ணயத்தில் முஸ்லிம்கள் வாய்ப்பை தவறவிடுவார்களா?..!! (கட்டுரை)