ஹரிஷ் கல்யாண் – ரைசா இணையும் படத்தின் பெயர் அறிவிப்பு..!!

Read Time:2 Minute, 2 Second

பிக் பாஸ் ஷோவில் தங்கள் திறமையினால் பலரது மனதை கவர்ந்த ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா, புதிய படத்தின் மூலம் ஜோடி சேர்கிறார்கள். இந்த படத்தை தற்போதைய திறமையான இளம் இயக்குனர்களில் ஒருவராக கருதப்படும் இளன் இயக்கவுள்ளார். இந்த செய்தி ஏற்கனவே வெளியானது.

தற்போது இப்படத்திற்கு ‘பியார் பிரேமா காதல்’ என சுவாரஸ்யமான தலைப்பு வைத்திருக்கிறார்கள். மேலும், இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டிருக்கிறது. இப்படம் காதல் கலந்த காமெடி படமாக உருவாக இருக்கிறது.

‘பாகுபலி’ தமிழகத்தில் ரிலீஸ் செய்த ‘கே புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனத்தோடு இணைந்து தனது இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, தனது ஒய்எஸ்ஆர் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரிக்கிறார்.

இதுகுறித்து யுவன் ஷங்கர் ராஜா கூறும்போது, ”ஒரு படத்தை தயாரிக்கும் பொழுது கிடைக்கும் உற்சாகம் அளவற்றது. நல்ல கூட்டணி, நல்ல கதை, நல்ல தொழில்நுட்ப கலைஞர்கள், முன்னேறி வரும் பிரபல நட்சத்திரங்கள் ஆகியவற்றின் சங்கமம் இப்படத்தயாரிப்பை மேலும் சிறப்பாக்கியுள்ளது. வெளிவராத திறமைகளை வெளிக்கொண்டு வந்து, உலகிற்கு காண்பிப்பதே எனது மற்றும் ‘கே புரொடக்‌ஷன்ஸ்’ ராஜா ராஜன் அவர்களின் நோக்கம். இளன் இயக்கும் இந்த படத்தை தொடர்ந்து மேலும் பல தரமான படங்களை நாங்கள் தயாரிக்கவுள்ளோம்.” என நம்பிக்கையோடு கூறினார் யுவன் ஷங்கர் ராஜா.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கலா மாஸ்டருடன் குத்தாட்டம் போட்டு அவமானப்பட்ட பிக்பாஸ் ஜுலி..!! (வீடியோ)
Next post கத்தரிக்காய் நிறமும் குணமும்..!!