‘மூக்கை அறுப்போம்’ என மிரட்டல்: தீபிகா படுகோனேவுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு..!!

Read Time:1 Minute, 27 Second

நடிகை தீபிகா படுகோனே நடித்த ‘பத்மாவதி’ என்ற சரித்திர படம், டிசம்பர் 1-ந்தேதி வெளியாகிறது. அதே சமயத்தில், ராஜபுத்திர வம்சத்தினரின் உணர்வுகளை புண்படுத்தும்வகையில் இருப்பதாக கூறி, அப்படத்துக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. எதிர்ப்பாளர்களுக்கு தீபிகா படுகோனே கண்டனம் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், ஸ்ரீராஜ்புத் கர்னி சேனா என்ற அமைப்பின் தலைவர் மகிபால் சிங் மக்ரானா, “ஆத்திரமூட்டும் வகையில் பேசுவதை கைவிடாவிட்டால், ராமாயணத்தில் சூர்ப்பனகையின் மூக்கை அறுத்ததுபோல், தீபிகா படுகோனேவின் மூக்கை அறுப்போம்” என்று நேற்று மிரட்டல் விடுத்தார்.

இதையடுத்து, தீபிகா படுகோனேவுக்கு மும்பை போலீசார் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர். தீபிகாவின் வீடு மற்றும் அலுவலகத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதுபோல், இப்படத்தின் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலிக்கு ஏற்கனவே பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஈரான் நிலநடுக்கம்: தோழிக்கு உணவு வாங்கிக் கொடுக்கும் சிறுவன் – வைராகும் வீடியோ..!!
Next post ஐகோர்: புரட்சிகர சக்திகளை ஒன்றிணைத்தல்..!! (கட்டுரை)