“அஜித் பாட்டுக்கு ரசிகர்களுடன் ஆட்டம் போடும் ஓவியா..!! (விடியோ)

Read Time:1 Minute, 32 Second

நடிகர் அஜித் நடித்த படப்பாடல் ஒன்றுக்கு , நடிகை ஓவியா தனது ரசிகர்களுடன் டான்ஸ் ஆடிய விடியோ ஒன்று தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

பிரபல தொலைக்காட்சியின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி மூலம் பெரும் புகழடைந்தவர் நடிகை ஓவியா. அந்நிகழ்ச்சியில் தனது பாஸிட்டிவ் மற்றும் தனித்துவமான நடவடிக்கைகளால் அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டார்.

விரைவில் நடிகர் ராகவேந்திரா லாரன்சுடன் திரைப்படம் ஒன்றில் அவர் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் ஓவியா தனது ரசிகர்களுடன், அஜித் பாடல் ஒன்றுக்கு டான்ஸ் ஆடிய விடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

அஜித் மற்றும் ஷாலினி நடிப்பில் உருவான, இயக்குநர் சரணின் ‘அமரக்களம்’ படத்தில் இடம்பெற்ற ‘உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு… என் உள்நெஞ்சு சொல்கின்றதே’ என்ற பாடலுக்குத்தான் ஓவியா தன் ரசிகர்களோடு நடனம் ஆடியிருக்கிறார்.

இந்த விடியோவானது தற்பொழுது ஓவியா ரசிகர்கள் மற்றும் அஜித் ரசிகர்களால் அதிகமாகப் பரவி வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 3 கண் உடைய கொசுவை பற்றி தெரியுமா??..!!
Next post காமம் சுகம் என்பது என்ன?..!!