இரண்டு வருடம் காதல்…. திருமணமாகி இரண்டு வாரத்தில் விவாகரத்து கேட்கும் பெண்… அதிர்ச்சியடைய வைக்கும் காரணம்..!!

Read Time:3 Minute, 3 Second

எகிப்தைச் சேர்ந்த சமர்(28) என்ற பெண் திருமணம் நடந்து இரண்டே வாரங்களில் விவாகரத்து கேட்டிருப்பதும், அதற்கான காரணமும் மிகவும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.இவரது கணவர் முகம்மது(31) துணிக்கடை வியாபரத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். இவரது வியாபாரத்தினை அனைத்தையும் இவரது வேலையாட்களே பார்த்து விடுகின்றனர்.

அதனால் பெரும்பாலான நேரம் வீட்டில் தான் இருப்பார். இதுகுறித்து அப்பெண் கூறுகையில், “என் கணவர் மற்ற ஆண்களைப்போல் இல்லை. குறிப்பிட்ட சில மணி நேரம் மட்டுமே தொழிலைக் கவனிக்கச் செல்கிறார்.

மீதி நேரம் முழுவதும் வீட்டிலேயே இருப்பது மட்டுமின்றி, உணவு சமைக்கிறது, துணி துவைப்பது என அனைத்து வேலைகளையும் அவரே செய்துவிடுகிறார். ஒரு சிறிய வேலையைக் கூட என்னைச் செய்ய அனுமதிப்பதில்லை.

ஒருவர் வேலையை செய்ய, இன்னொருவர் பார்த்துக்கொண்டிருப்பது எவ்வளவு கொடுமையானது? என்னுடைய ஆதங்கத்தை அவரிடம் எடுத்துச் சொன்னேன். இந்த வீட்டில் நான் வாழ விரும்பினால், அவருடைய விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றார்.

இரண்டு ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்த அவரை இரண்டு வாரங்களில் விவாகரத்து செய்வேன் என்று கனவிலும் நினைக்கவில்லை என்று கூறியுள்ளார்.இந்த சிறை வாழ்க்கை குறித்து தனது மாமியார் வீட்டிலும், அம்மா வீட்டிலும் கூறினாலும் யாரும் நம்பவில்லையாம்.

மேலும் குளிர்சாதனப் பெட்டியில் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பொருட்கள், பீரோவில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் துணிகள், வீட்டின் தூய்மை எல்லாவற்றையும் பார்த்து முகம்மது மீது இன்னும் மதிப்பை உயர்த்திக்கொண்டனர்.

ஆனால் எனக்கோ ஒரு விருந்தாளிபோல் இங்கே தங்கியிருப்பதாகத் தோன்றுகிறது. சுதந்திரமும் உழைப்பும் இல்லாத வீட்டில் வாழ முடியாது என்றுதான் விவாகரத்துக்குத் தயாராகிவிட்டேன். விரைவில் நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கைத் தாக்கல் செய்வேன்” என்று தெரிவித்துள்ளார் சமர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நாக்கின் நிறத்தை வைத்து உடல்நலத்தை அறிவது எப்ப‍டி?..!!
Next post உடலுறவு பற்றி உங்களுக்கும் இந்த சந்தேகமெல்லாம் இருக்கா?…!!