35 வயதிற்கு மேல் பெண்கள் அவசியம் செய்து கொள்ள வேண்டிய பரிசோதனைகள்..!!

Read Time:6 Minute, 36 Second

குடும்பத்தில் உள்ளவர்களுக்காக வீட்டிலும், வேலையிடத்தில் உள்ளவர்களுக்காக அலுவலகத்திலும் உழைத்துத் தியாகி பட்டம் சுமக்கும் பெண்களை எல்லா வீடுகளிலும் பார்க்கலாம். பிரச்சனை வந்தால் மட்டுமே மருத்துவரைப் பார்க்கும் பெண்களுக்கு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் செய்து கொள்ள வேண்டிய அவசிய பரிசோதனைகளைப் பற்றிப் பார்க்கலாம்.

* ஹீமோகிராம் ரத்த சோகை இல்லாத பெண்களே இல்லை எனலாம். அதீத சோர்வு, எப்போதும் தூக்கம், முகம் உப்பி, வெளிறிக் காணப்படுதல், கண்கள், நாக்கு வெளிறி காணப்படுவதெல்லாம் ரத்தசோகைக்கான அறிகுறிகளாகும். தவிர முடி உதிர்தல், மூச்சு வாங்குதல், குளிர்ச்சியான சூழலைத் தாங்க முடியாமை, மாதவிலக்குப் பிரச்சனை போன்றவை எல்லாம் கூடுதல் அறிகுறிகள். பெண்களுக்கு மாதவிலக்கு தவிர்க்க முடியாத நிகழ்வு என்பதால், அதுவும் அவர்களது ரத்த சோகைக்கான முக்கிய காரணமாகிறது.

6 மாதங்களுக்கொரு முறை முழுமையான ரத்தப் பரிசோதனை மேற்கொள்வதன் மூலம், ஹீமோகுளோபின் அளவு, ரத்தத்தில் உள்ள சிவப்பு மற்றும் வெள்ளை செல்கள், ரத்தத் தட்டணுக்களின் எண்ணிக்கையைத் தெரிந்துகொண்டு, மேற்சொன்ன பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே சரி செய்ய முடியும்.

பெண்களுக்கு ஹீமோகுளோபின் அளவு 11 முதல் 12 கிராம் இருக்க வேண்டும். இது குறைகிற போது கவனம் தேவை.ஹீமோகுளோபின் அளவு வெகுவாகக் குறையும்போது அது உயிருக்கே ஆபத்தாக முடியலாம் என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.

* தலை முதல் கால் வரை பாரபட்சமின்றி, உடலின் அனைத்து உறுப்புகளையும் பாதிக்கக்கூடிய நீரிழிவு, யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். குடும்பப் பின்னணியில் நீரிழிவு உள்ளவர்களுக்கு வாய்ப்புகள் கொஞ்சம் அதிகம். இதற்கான ரத்தப் பரிசோதனையை வெறும் வயிற்றிலும், பிறகு சாப்பிட்ட 2 மணி நேரம் கழித்தும் செய்ய வேண்டும். வெறும் வயிற்றில் 100 மி.கிராமுக்குக் குறைவாகவும், சாப்பிட்ட பிறகு 140 மி.கி-க்கு குறைவாகவும் இருக்க வேண்டும்.

தாகம், புண்கள் ஆறாதது, சருமத்தில் அரிப்பு மற்றும் மாற்றம், பார்வைப் பிரச்சனை என திடீரென உங்கள் உடலில் எந்த மாற்றம் தெரிந்தாலும் சர்க்கரை நோய்க்கான சோதனையை செய்து பார்ப்பது நல்லது.

* கொலஸ்ட்ராலுக்கும் உங்கள் உடல் தோற்றத்துக்கும் சம்பந்தமில்லை என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள். ஒல்லியான தோற்றம் கொண்டவர்களுக்கும் உள்ளுக்குள் கொழுப்பின் அளவு அதிகமாக இருக்கலாம். கொலஸ்ட்ரால் என்பது எல்லாவிதமான பயங்கர நோய்களையும் வரவேற்கும் ஆபத்தின் வாயில் என்பதால் அலட்சியம் வேண்டாம்.

* தைராய்டு பாதிப்பின் தீவிரமும் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. தலை முதல் கால் வரை ஒட்டுமொத்த உடலையும் கட்டுப்படுத்துகிற ஒருவித ஹார்மோன். இது சரியில்லாவிட்டால், மூளை வளர்ச்சி பாதிப்பது, ரத்த செல்கள் முதிர்ச்சியடையாமை, மாதவிலக்கு, தலைமுடி உதிர்வது என ஏகப்பட்ட பாதிப்புகள் வரலாம்.

தைராய்டு சுரப்பு கூடினாலும் பிரச்சனை, குறைந்தாலும் பிரச்சனை. எளிமையான ரத்தப் பரிசோதனை மூலம் இதைத் தெரிந்து கொள்ளலாம். 50 வயதுக்கு மேலானவர்கள், குடும்பப் பின்னணியில் தைராய்டு பாதிப்புள்ளவர்கள், டைப் 1 வகை நீரிழிவு உள்ளவர்கள், காரணமின்றி உடல் எடை கூடியவர்கள் அல்லது குறைந்தவர்கள் போன்றோருக்கு இந்த சோதனை மிக மிக முக்கியம்.

* இன்று யாருக்கு வேண்டுமானாலும் எந்தக் காரணங்களும் இல்லாமல் புற்றுநோய் தாக்குவதைப் பார்க்கிறோம். சர்க்கரை நோய் மாதிரிதான் இதுவும். போன வருடம் செய்த சோதனையில் நார்மல் எனக் காட்டியிருக்கும். இந்த வருடம் வேறு மாதிரி காட்டலாம். எனவே,பெண்கள் மார்பகங்கள் மற்றும் கர்ப்பவாய்க்கான புற்றுநோய் பரிசோதனைகளை வருடம் தவறாமல் மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

குடும்பப் பின்னணியில் யாருக்காவது மார்பகப் புற்றுநோய் இருந்தால், அந்த வழியில் வருபவர்களுக்கும் அது பாதிக்கும் அபாயங்கள் அதிகம். சமீபகாலமாக, அப்படி குடும்பப் பின்னணி இல்லாதவர்களையும் மார்பகப் புற்றுநோய் அதிகம் தாக்குவதைப் பரிசோதனை செய்து, கட்டிகளோ, வீக்கமோ, கசிவோ இருக்கிறதா எனப் பார்க்க வேண்டும். தவிர வருடம் ஒரு முறை மோமோகிராம் சோதனையும் அவசியம். எக்ஸ் ரே மாதிரியான எளிய சிகிச்சைதான் அது. ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடித்தால், மார்பகங்களை நீக்கும் அளவுக்குப் போக வேண்டிஇருக்காது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உடலுறவு பற்றி உங்களுக்கும் இந்த சந்தேகமெல்லாம் இருக்கா?…!!
Next post பிளீச்சிங் செய்வதால் சருமத்துக்கு பாதிப்பு ஏற்படுமா?..!!