விஜய்யின் அடுத்த படத்தின் முக்கிய அறிவிப்பு..!!

Read Time:1 Minute, 32 Second

வனமகன்’ படத்திற்கு பிறகு விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் படம் `கரு’.

பெண்களை மையப்படுத்தி உருவாகி வரும் இந்த படத்தில் சாய் பல்லவி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். நாக சவுரியா, வெரோனிகா அரோரா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

`விக்ரம் வேதா’ புகழ் சாம்.சி.எஸ். இசையமைக்கும் இந்த படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபஷ்கரன் தயாரித்து வருகிறார்.

தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தின் டிரைலரை நடனப் புயல் பிரபுதேவா வருகிற 18-ஆம் தேதி அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிடுகிறார்.

ஏற்கனவே `கரு’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ரை பிரபுதேவா வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. `தேவி’ படத்தின் மூலம் பிரபுதேவா – ஏ.எல்.விஜய் நெருங்கிய நண்பர்களாகி இருக்கின்றனர். `தேவி’ படத்தை தொடர்ந்து பிசியாக நடித்து வரும் பிரபு தேவா விஜய் இயக்கத்தில் நடிக்க மீண்டும் ஒப்பந்தமாகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொஞ்சி விளையாடும் அழகு மீன்..!! ( வீடியோ)
Next post நாக்கின் நிறத்தை வைத்து உடல்நலத்தை அறிவது எப்ப‍டி?..!!