நாளை முதல் `நெஞ்சில் துணிவிருந்தால்’ ஓடாது: சுசீந்தரன் திடீர் அறிவிப்பு..!!

Read Time:2 Minute, 11 Second

சுசீந்திரன் இயக்கத்தில் கடந்த 9-ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை சந்தித்து வரும் படம் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’.

சந்தீப் கிஷன், விக்ராந்த், மெஹ்ரீன் பிர்சாடா, சூரி, ஹரிஸ் உத்தமன் உள்ளிட்ட பலரும் நடித்து வரும் இந்த படம் நாளை முதல் திரையரங்களில் ஓடாது என்று படத்தின் இயக்குநர் சுசீந்திரன் கூறியிருக்கிறார். இதுகுறித்து சுசீந்திரன் அவரது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியிருப்பதாவது,

நெஞ்சில் துணிவிருந்தால் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீசாகியது. சில தவிர்க்க முடியாத காரணத்தினால் இந்த படத்தை ரீ-ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளோம். அடுத்தமாதம் 15-ஆம் தேதி இந்த படம் மீண்டும் திரைக்கு வருகிறது. இந்த படத்திற்கு உண்மையான விமர்சனங்கள் அளித்தவர்களுக்கும், உள்நோக்கத்தோடு விமர்சனம் செய்தவர்கள் என அனைவருக்கும் நன்றி. சில தவிர்க்க முடியாத காரணங்களால் நாளை முதல் எந்த திரையரங்குகளிலும் இந்த படம் ஓடாது.

இவ்வாறு கூறியிருக்கிறார்.

சமீபத்தில் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தில் இருந்து நாயகி மெஹ்ரீன் சம்பந்தப்பட்ட காட்சிகளை படக்குழு நீக்கியிருந்தது. இதில் 20 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டதாக சுசீந்திரன் அறிவித்திருந்தார். இந்நிலையில் படத்தை ரீ-ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளதாக புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குண்டு பாய்ந்த பிறகும் திருடர்களை தடுத்த ஏடிஎம் காவலாளி – வீடியோ..!!
Next post கொஞ்சி விளையாடும் அழகு மீன்..!! ( வீடியோ)