குண்டு பாய்ந்த பிறகும் திருடர்களை தடுத்த ஏடிஎம் காவலாளி – வீடியோ..!!

Read Time:1 Minute, 27 Second

டெல்லியின் உள்ள மஜ்ரா தபாஸ் என்ற பகுதியில் எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம் ஒன்று உள்ளது. இந்த ஏடிஎம்மில் ஹெல்மெட் அணிந்த இரண்டு கொள்ளையர்கள் பணத்தைத் திருட முயற்சித்தனர்.

அப்போது பணியிலிருந்த காவலாளி அவர்களைத் திருட விடாமல் தடுத்துள்ளார். அப்போது கொள்ளையர்கள் அந்தக் காவலாளியைத் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.காயமடைந்த காவலாளி, தொடர்ந்து அவர்களைத் திருட விடாமல் தடுத்தார்.

இதனால், கொள்ளையர்கள் திருடமுடியாமல் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். இதனைத் தொடர்ந்து, அங்கிருந்த மக்கள் உடனே காவலாளியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

துப்பாக்கியால் சுடப்பட்டாலும் காவலாளி கொள்ளையடிக்க முயன்ற திருடர்களை துணிச்சலாக தடுத்த சம்பவம் அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யுவன் ஷங்கர் ராஜா மிரட்டும் ‘பேய் பசி’..!!
Next post நாளை முதல் `நெஞ்சில் துணிவிருந்தால்’ ஓடாது: சுசீந்தரன் திடீர் அறிவிப்பு..!!