சில நொடிகளில் விமானத்தை தாக்கிய மின்னல்: அதிர்ஷ்டவசமாக தப்பிய பயணிகள்..!! (வீடியோ)

Read Time:1 Minute, 57 Second

நெதர்லாந்தில் பயணிகள் விமானம் ஒன்று வானில் பறந்த போது, சில நொடிகளில் விமானத்தை மின்னல் வந்து தாக்கியது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.நெதர்லாந்தின் Amsterdam’s Schiphol விமானநிலையத்தில் இருந்து Lima பகுதிக்கு Boeing 777-300ER KLM விமானம் ஒன்று பயணிகளுடன் புறப்பட்டு சென்றுள்ளது.

மேலே சென்ற விமானம், வானில் சிறிது தூரம் பறந்தவுடன், மோசமான வானிலை காரணமாக விமானத்தின் மூக்குப் பகுதியை சில நொடிகளில் மின்னல் தாக்கியுள்ளது.

விமானத்தை இடி மற்றும் மின்னல் போன்றவைகள் தாக்காமல் இருப்பதற்கு விமானத்தின் மேற்பரப்பில் அலுமினிய பயன்படுத்தப்படுவதால், விமானத்திற்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை எனவும், 12 மணி நேரம் 40 நிமிடங்கள் Lima விமான நிலையத்திற்கு தாமதமாக சென்றடைந்ததாகவும் விமான நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விமானத்தில் இருந்த பயணிகளுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது. விமானத்தை மின்னல் தாக்கிய போது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

கடந்த 1963-ஆம் ஆண்டு அமெரிக்காவின் Maryland பகுதியில் இடி மற்றும் மின்னல் காரணமாக Boeing 707-121 ரக விமானம் வெடித்து சிதறியதில் 81 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ‘டிராபிக் ராமசாமி’ திரைப்படத்தில் விஜய் ஆண்டனி..!!
Next post விஜய் பெயர் கொண்டவர்கள் பூனை போன்றவர்கள்: ராதிகா..!!