வாரத்துக்கு எத்தனை முட்டை சாப்பிடலாம்?..!!!

Read Time:2 Minute, 48 Second

சில உணவுப்பொருட்களை நாம் விரும்பியும், தயங்கியும் அணுகுவோம். அப்படிப்பட்ட ஒன்றுதான் முட்டை. வாரத்துக்கு எத்தனை முட்டை சாப்பிடலாம்? இதற்கு, ‘மூன்று’ என்பதுதான் உணவியல் நிபுணர்களின் பதில்.

முட்டையில் நம் உடலுக்குத் தேவையான பல சத்துகள் நிறைந்துள்ளன. முட்டையின் மஞ்சள் கருவில் வைட்டமின் ஏ, டி, ஈ., கே, பி12, பாலேட், லூட்டின், சீசாந்தின் போன்ற ஆன்டி ஆக்சிடென்டுகள் உள்ளன.

சிலர் முட்டையின் மஞ்சள் கருவை சாப்பிடுவதைத் தவிர்ப்பார்கள். மருத்துவர்களின் அறிவுரையின்றி அவ்வாறு மஞ்சள் கருவை சாப்பிடுவதைத் தவிர்ப்பதால் நாம் சத்துகளை இழக்கத்தான் செய்கிறோம்.

மேலும், முட்டையில் மற்ற உணவுப்பொருட்களில் இல்லாத ‘சோலின்’ என்ற வைட்டமின் பி சத்தும் உள்ளது. இது மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. முட்டையில் உள்ள சீசாந்தின், கண் நோய்கள் வராமல் தடுக்கிறது. செலினியம், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற பல நுண்ணூட்டச் சத்துகளும் முட்டையில் உள்ளன.

முட்டை மருத்துவரீதியில் அல்புமினுக்குப் பெயர் பெற்றது. ரத்தத்தில் அல்புமின் குறைவாக இருப்பவர்கள் முட்டையின் வெள்ளைக் கருவைச் சாப்பிடலாம்.

முக்கியமாக, ‘டயாலிசிஸ்’ செய்து கொண்டிருப்பவர்களுக்கும், கல்லீரல் தொடர்பான நோய்கள் உள்ளவர்களுக்கும் அல்புமின் குறைவாக இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது. அவர்கள், முட்டையை அவித்து அதன் வெள்ளைக்கருவை உட்கொள்ளலாம்.

ஒரு முட்டையில் 212 மில்லி கிராம் கொலஸ்ட்ரால் உள்ளது. இது நமது ஒருநாளின் தேவைக்குப் போதுமானதாகும்.

வளரும் குழந்தைகளுக்குத் தினமும் ஒரு முட்டையை வேகவைத்துக் கொடுத்தால் அவர்களின் சீரான வளர்ச்சிக்கு உதவும்.

சாதாரணமாக ஒருவர், வாரத்துக்கு 3 முட்டைகள் சாப்பிடலாம். கர்ப்பிணிகளும், தாய்மார்களும் தினம் ஒரு வேகவைத்த முட்டையை உண்ணலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விஜய் பெயர் கொண்டவர்கள் பூனை போன்றவர்கள்: ராதிகா..!!
Next post அடுத்தடுத்து வெளியாகும் கமல்ஹாசனின் 6 படங்கள்..!!