‘டிராபிக் ராமசாமி’ திரைப்படத்தில் விஜய் ஆண்டனி..!!

Read Time:2 Minute, 3 Second

சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியின் வாழ்க்கையைக் கருவாக வைத்து சில மாற்றங்களோடு உருவாகிக் கொண்டிருக்கும் படம் `டிராபிக் ராமசாமி’. இதில் கதையின் நாயகனாக அதாவது டிராபிக் ராமசாமியாக இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரனும், அவர் மனைவியாக ரோகிணியும் நடிக்கிறார்கள்.

கதாநாயகனாக ஆர்.கே.சுரேஷும், கதாநாயகியாக உபாஷனாவும் நடிக்க, நீண்ட இடைவெளிக்குப் பிறகு நகைச்சுவை கலந்த நீதிபதியாக அம்பிகா நடிக்கிறார். இவர்களுடன் லிவிங்ஸ்டன், இமான் அண்ணாச்சி, அம்மு ரவிச்சந்திரன், சார்லஸ் வினோத், சின்னத் திரை புகழ் சேத்தன், பேபி ஷெரின், மோகன்ராம், மதன்பாப் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

இந்த படத்தை எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த விஜய் விக்ரம் இயக்குகிறார். ஈரோடு மோகன் என்பவர் தயாரிக்கும் இந்த படத்திற்கு பாலமுரளி பாலு இசையமைக்கிறார். குகன் எஸ்.பழனி ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார்.

இந்தப் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் விஜய் ஆண்டனி கெளரவ வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். அநியாயங்களை தட்டிக் கேட்கும் சமூக அக்கறை உள்ள இளைஞனாக ஒரு திரைப்பட நடிகராகவே அவர் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் ஆண்டனி எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் உருவான சுக்ரன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆசிரியருடன் பாதிரியார் அடித்த லூட்டி… வைரலாய் பரவிய காட்சி ..!! (வீடியோ)
Next post சில நொடிகளில் விமானத்தை தாக்கிய மின்னல்: அதிர்ஷ்டவசமாக தப்பிய பயணிகள்..!! (வீடியோ)