செல்லப்பிராணிக்கு பயிற்சி அளிக்கும் டோனி – வைரலாகும் வீடியோ..!!

Read Time:1 Minute, 45 Second

இந்திய கிரிக்கெட் அணி நாளை முதல் இலங்கை அணியுடன் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான மகேந்திர சிங் டோனி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். அதனால் அவர் தற்போது தனது சொந்த வேலைகளை பார்த்து வருகிறார். சமீபத்தில் துபாயில் தனது முதல் கிரிக்கெட் அகாடமியை தொடங்கினார்.

டோனி ராஞ்சியில் இருக்கும் தனது வீட்டில் இப்போது நேரம் செலவழித்து வருகிறார். அவர் தனது வீட்டில் மூன்று நாய்களை செல்லப்பிராணியாக வளர்த்து வருகிறார். அவற்றுடன் அவர் விளையாடும் வீடியோக்கள் அவ்வப்போது இணையதளத்தில் பதிவிடப்பட்டு வைரலாக பரவியுள்ளது.

இந்நிலையில், இப்போது அவர் தனது செல்லப்பிராணி நாயுடன் விளையாடும் வீடியோ தற்போது இணையதளத்தில் பதிவிடப்பட்டு வைரலாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில் அவர் தனது நாயை தடைகளை தாண்டி குதிக்கவும், ஒரு வளையத்திற்குள் நுழைந்து செல்லவும் செய்துள்ளார். அவர் கூறுவது போலவே அவரது செல்லப்பிராணியும் செயல்படுகிறது. அவரும் நாயுடன் அருகில் ஓடி வரும் இந்த வீடியோ இணைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மருத்துவ மாணவிக்கு கொலை மிரட்டல்: நடிகை புவனேஸ்வரி மகன் கைது..!!
Next post பத்மாவதி படத்தை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது: தீபிகா படுகோனே ஆவேசம்..!!