ஓரின சேர்க்கை பற்றி வெளிப்படையாக பேசிய 2 பாலிவுட் ஹீரோயின்கள்..!!

Read Time:1 Minute, 27 Second

பாலிவுட்டில் முன்னணி நடிகைகளாக இருக்கும் சோனம் கபூர் மற்றும் ஆலியா பட் ஆகியோர் ட்விட்டரில் பேசியுள்ளனர்.

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஒரு விழாவில் பேசிய குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரிடம் ஒரு மாணவர் ஓரின சேர்க்கையாளரான தன்னை மற்றவர்கள் தவறாக நடத்துவதை தவிர்ப்பது எப்படி என கேட்டார்.

அதற்கு “நீங்கள் உங்களை தாழ்வாக நினைக்காதீர்கள், அப்போது தான் உங்களால் எதிர்த்து நிற்க முடியும். மேலும் இது நிரந்தரமான ஒன்று அல்ல. சிலர் ஆரம்பத்தில் ஓரினசேர்க்கையாளராக இருந்து பின்னர் மாறியுள்ளதை நான் பார்த்துள்ளேன்,” என ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தெரிவித்தார்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பாலிவுட் நடிகை சோனம் கபூர் “ஓரின சேர்க்கை என்பது பிறக்கும்போதே வருவது அது மாறாது” என ட்விட்டரில் கூறியுள்ளார்.

மேலும் நடிகை ஆலியா பட் சோனம் கபூரின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புகார் கொடுத்த மனைவியை பாட்டு பாடி மயக்கிய கணவர்!! காவல் நிலையத்தில் நடந்த வைரல் சுவாரஸ்யம்..!! (வீடியோ)
Next post எலுமிச்சை பழ தோல் தரும் பலன்கள்..!!