எலுமிச்சை பழ தோல் தரும் பலன்கள்..!!
உலகம் முழுக்க எல்லா பருவ காலங்களிலும் கிடைக்கும் ஒரே பழம் எலுமிச்சைதான். நம் எல்லோருடைய சமையலறையிலும் இருக்கக் கூடியது. அழகுப் பொருட்களில் முக்கிய பங்கு எலுமிச்சைக்கு உண்டு. எலுமிச்சையில் அதிகப்படியான வைட்டமின்கள், தாதுப்பொருட்கள் நார்ச்சத்துக்கள் உள்ளன. ஊட்டச் சத்தும் குறைவில்லாமல் கிடைக்கும்.
எலுமிச்சைச் சாற்றில் உள்ள சத்துக்களை விட, அதன் தோல்தான் வைட்டமின் சி மற்றும் ஏ, பீட்டா கரோட்டின், கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், போலேட் போன்ற சத்துக்கள் உள்ளன. எது ஒன்றையும் சுத்தம் செய்வதில் இதன் தோல்தான் முதலிடத்தில் உள்ளது. இதன் தோல் மிகவும் நறுமணமிக்கதாகவும், புத்துணர்ச்சி அளிப்பதாகவும் உள்ளது.
எலுமிச்சையின் தோலில், நம் சருமத்திற்கு ஏற்ற அனைத்து நன்மைகளும் உண்டு. அதில் உள்ள அமிலமானது நம் சருமத்தை மிருதுவாக்கி, பளிச்சென்ற தோற்றத்தை கொடுக்கும். நம் சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி புது செல்கள் வளரத் தூண்டுகிறது. எலுமிச்சை தோலை வெயிலில் உலர்த்தி நன்கு காய்ந்தவுடன் அதை பொடித்து அத்துடன் தேன், சர்க்கரை, ஆலிவ் எண்ணெய் சேர்த்து முகத்தில் பூசினால், முகம் பிளச் செய்தாற்போல் மாறிவிடும். சூரியக் கதிர்களால் ஏற்பட்ட கருமையும் மறையும்.
எலுமிச்சை தோலின் உட்புறத்தில் உள்ள வெள்ளைத் தோலை நீக்கிவிட்டு, சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து, அதில் தேவையான அளவு வெந்நீர் ஊற்றிக்கொள்ள வேண்டும். 10 நிமிடங்களுக்கு பிறகு அதை வடிகட்டி, அத்துடன் தேன் கலந்து பருகலாம். இந்த டீ நம் ஜீரண மண்டலத்தை வலுப்பெறச் செய்வதோடு, உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது. மேலும் கல்லீரலுக்கு புத்துணர்ச்சி அளித்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது.
நகங்களை 10 நிமிடங்கள் வெதுவெதுப்பான நீரில் ஊற வைத்த பின்பு எலுமிச்சை தோலால், நகங்களின் மேல் 30 வினாடிகள் தேய்த்த பின்பு கழுவ வேண்டும். இது போல் 2 நாட்களுக்கு ஒருமுறை செய்து வந்தால், நகங்களில் உள்ள மஞ்சள் நிறம் மறைந்து விடும். இதேபோல பற்களில் தேய்த்து வாய் கொப்பளித்தால், பற்களில் உள்ள மஞ்சள் நிறம் நாளடைவில் மறைந்து, வெண்மையான புன்னகையை பெறலாம்.
எலுமிச்சை தோலை நன்றாகத் துருவி ஸ்பிரேயர் உள்ளே போட்டு, அத்துடன் ஒயிட் வினிகரை சேர்க்க வேண்டும். அதை நல்ல வெளிச்சம் உள்ள இடத்தில் 2 வாரம் வைக்க வேண்டும். பின்பு அதனை கிரானைட், மார்பிள் தவிர மற்ற இடங்களில் சுத்தம் செய்யும் கலவையாக பயன்படுத்தலாம். வீட்டில் எறும்பு, கரப்பான்பூச்சி தொல்லை இருந்தால் எலுமிச்சை தோலை நறுக்கி வைத்தால் போதும். அவை ஓடி மறைந்துவிடும்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating