டைரக்டர் சொன்ன படி நடக்காததால் 10 பட வாய்ப்புகளை இழந்த பிரியங்கா சோப்ரா – மதுசோப்ரா தகவல்..!!

Read Time:1 Minute, 49 Second

2000-ம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்றவர் பிரியங்கா சோப்ரா. இவர் விஜய்யின் ‘தமிழன்’ படம் மூலம் நடிகை ஆனார். தற்போது இந்தி பட உலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். ஹாலிவுட் படங்களிலும் நடிக்கிறார்.

இப்போது பிரியங்கா சோப்ரா பற்றி அவருடைய தாயார் மது சோப்ரா தெரிவித்துள்ள முக்கிய தகவல் இதோ…

“ பிரியங்கா நடிக்க வந்த புதிதில் பிரபல டைரக்டர் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதில் அரை குறை ஆடை அணிந்து நடிக்க வேண்டும் என்றார். மறுத்த போது, ‘உலக அழகி பட்டம் வென்றவரை அழகாக காட்ட வேண்டாமா’ என்று இயக்குனர் கேட்டார். ஆனால் அதில் நடிக்காமல் பிரியங்கா விலகினார். இதனால் அந்த இயக்குனர் கோபம் அடைந்தார். அந்த படத்தில் இருந்து விலகியதால் பிரியங்காவுக்கு 10 படங்களில் நடிக்கும் வாய்ப்பு பறிபோனது.

என் மகள் சினிமா துறைக்கு வந்த போது அவருக்கு வயது 17 தான். கடந்த 3 வருடங்களுக்கு முன்புவரை என் மகள் எங்கு சென்றாலும் என்னையும் அழைத்துச் செல்வாள். ஒரு முறை மகளிடம் கதை சொல்ல வந்தவர் ‘உங்கள் அம்மா அறையை விட்டு வெளியே சென்றால் நல்லது என்றார்’ ஆனால் என்மகள் அம்மா கேட்க முடியாத கதையில் நான் நடிக்க மாட்டேன் என்று சொல்லி விட்டாள்”.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காதலிக்க மறுத்த பெண்… குடும்பத்துடன் தீயிட்டு கொளுத்திய காதலன்..!!
Next post பாலாவின் அடுத்த படத்தின் முக்கிய அறிவிப்பு..!!