தினமும் 4 மணி நேரத்திற்கும் மேல் ஏ.சி அறையில் வேலை செய்கிறீர்களா? அவசியம் இதைப் படியுங்கள்..!!

Read Time:4 Minute, 12 Second

90-களில் ஒரு வீட்டில் ஏ.சி. அவர் பெரிய செல்வந்தர் என்ற பெயர் இருக்கும். பணக்காரர் என்பதை வெளிப்படுத்தும் ஒரு கருவியாக ஏ.சி இருந்த காலம் அது. ஆனால், இன்று, ஏ.சி நடுத்தர குடும்பங்களிலும் கூட எளிதாக இடம்பெறும் ஒரு அத்தியாவசிய பொருளாக மாறி நிற்கிறது. பெரும்பாலான அலுவலகங்களில் நாம் ஏ.சி காண முடியும்.

ஷாப்பிங் மால், சூப்பர் மார்க்கெட் தொடங்கி, பியூட்டி பார்லர், ஹேர் ஸ்டைலிங் சலூன் என திரும்பும் பக்கம் எல்லாம் ஏ.சி கண்ணில் தட்டுப்படும் காலத்தில் தான் நாம் இப்போது வாழ்ந்து வருகிறோம்.

இதில் என்ன இருக்கிறது என கேட்கிறீர்களா? இதனால் உடல்நல கோளாறு பலவன உண்டாக வாய்ப்புகள் வெகுவாக இருக்கிறது….

ஈரப்பதம்சமீபத்திய ஆய்வொன்றில், ஏ.சி அறைகளில் அதிக நேரம் செலவழிப்பதால் உடல் நல பிரச்சனைகள் அதிகரிக்கின்றன என மருத்துவர்களால் அறியப்பட்டுள்ளது.

இதற்கு காரணம் ஏ.சி இயற்கை காற்றை நமக்கு தருவது இல்லை. இது காற்றில் இருந்து ஈரப்பதத்தை மட்டும் எடுத்து, அதை குளிர் காற்றாக நமக்கு அளிக்கிறது. மேலும், அறையில் இருக்கும் சூடான காற்றை இது வெளியேற்றுகிறது.

அலர்ஜி!

உங்களுக்கு முன்னவே அலர்ஜி இருக்கிறது என்றால் ஏசி அறையில் நீங்கள் சுவாசிக்கும் காற்று உங்களுக்கு மேலும் சில பிரச்சனைகள் உண்டாக காரணியாக அமையும்.

பிரச்சனைகள்!

சொறி, அரிப்பு, சளி, கண் எரிச்சல் போன்றவை உண்டாக ஏசி காற்று காரணியாக அமைகிறது. எனவே, முன்னவே அலர்ஜி இருப்பவர்கள் ஏசி காற்றை சுவாசிப்பதில் இருந்தும், ஏசி அறைகளில் இருந்தும் தள்ளியே இருப்பது நல்லது.

லிஜினல்லா பாக்டீரியா!

ஏசியை சரியான கால இடைவேளையில் சுத்தம் செய்யாமல் பயன்படுத்தினால், லிஜினல்லா எனும் பாக்டீரியா தாக்கம் ஏற்படும்.இது ஏசியில் மட்டுமே வளரக்கூடிய பாக்டீரியா ஆகும். இது சுவாவப் பாதையில் பரவும் பட்சத்தில் நிமோனியா உருவாகலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பறவைகள் மூலம் பிரச்சனை!

உங்கள் வீட்டின் ஏசியின் பின் பக்கத்தில் பறவைகள் தங்கியிருந்தாலும் பிரச்சனை உண்டாகும். ஆம், பறவைகளின் கழிவுகள் மூலமாக கிரிப்டோக்காக்ஸ் எனும் பூஞ்சை வளர்கிறது.

இதனால், மனித மூளை பாதிக்கப்படுகிறது. மேலும், இதனால் கிரிப்டோக்காக்கல் மெனிஞ் சைட்டிஸ்” எனும் நோயும் உண்டாகலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கை தெரிவிக்கின்றனர்.

வைட்டமின் டி!

ஏசி அறையில் அதிக நேரம் செலவிடும் நபர்களிடம் வைட்டமின் டி குறைபாடு தென்படுகிறது. இவர்கள் சூரிய வெளிச்சத்தில் இருந்து அதிகம் விலகி இருப்பதே இதற்கான முக்கிய காரணியாக திகழ்கின்றது.

பிற கோளாறுகள்..

நீங்கள் ஏசிக்கு நேர் எதிராக அமர்ந்திருந்தால், மூக்கடைப்பு, தலைவலி, காது அடைத்திருப்பது போன்ற உணர்வு போன்றவை அதிகம் ஏற்படும். எனவே, அதிகம் ஏசி பயன்படுத்துவதை தவிர்த்து விடுங்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சுத்தி சுத்தி லவ் பண்ணிட்டேன், ஒன்னும் வேலைக்கு ஆகல: ஆர்யா..!!
Next post `பிக் பாஸ்’ ஆரவுக்கு அடிக்கும் ஜாக்பாட்..!!