எப்பவும் சாப்பிட்டு கொண்டே இருப்பது எந்த நோயின் அறிகுறி தெரியுமா?..!!

Read Time:2 Minute, 33 Second

உணவு என்பது அத்தியாவசியம் என்ற இடத்தை கடந்து ஆடம்பரம் என்ற இடத்தை நோக்கி நகர்ந்து விட்டது. இன்றைய ஃபாஸ்ட் புட் உலகத்தில் புதுப்புது நோய்கள் வந்து கொண்டிருக்கிறது. அப்படி வந்திருக்கும் ஒரு நோய் தான் மிதமிஞ்சிய உணவுகளை உண்பது.

இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. அவற்றில் சில, உடல் ரீதியாகவென்றால், நம் ஹார்மோன்களில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் அல்லது சிலருக்கு ஜெனிட்டிக் ஆகவே இந்த பாதிப்பு ஏற்படும். மனரீதியாக என்றால், முக்கிய காரணம் மன அழுத்தம். உணர்வுகளை கையாளத் தெரியாததும், அதீத கோபமும் காரணம். இவற்றைத் தாண்டி இந்த பிரச்சனைக்கு சமூகரீதியிலான காரணங்களும் உண்டு.

வயிறு முட்ட சாப்பிட்ட பின்பும் இன்னும் இன்னும் சாப்பிடத்தூண்டும். எவ்வளவு சாப்பிடுகிறோம் எப்போது நிறுத்த வேண்டும் என்று தன்னாலேயே நிறுத்த முடியாமல் போகும். நேரங்கெட்ட நேரத்தில் உணவுகளைத் தேடுவது, சாப்பிட்டால் ரிலாக்ஸாக இருக்கும், சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும் போன்ற அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக சிகிச்சையளிக்க வேண்டும். இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக உடல் எடை கொண்டவராக இருக்க மாட்டார்கள்.

சாதாரணமாக சாப்பிடுபவர்களுக்கே நோய்கள் வரும் போது, இப்படி அதீதமாகச் சாப்பிடுவது பெரும் ஆபத்துக்களை ஏற்படுத்தும், சர்க்கரை நோய், இதயக்கோளாறு, ஒபீசிட்டி என இதனால் ஏற்படும் பிரச்சனைகள் ஏராளம்.

பெரும்பாலும் அவர்களின் மனக்குறையை யாரிடமும் சொல்ல முடியாத போது அல்லது தீர்க்க முடியாத போதுதான் இப்பிரச்சனை ஏற்படுகிறது என்பதால் சைக்கோதெரபி கொடுக்கலாம் என்பது இந்நோய்க்கான சிகிச்சை முறைகளில் ஒன்று.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நடிகை லேகா வாசிங்டனுக்கு திருமணம்: பத்திரிகையாளரை மணக்கிறார்..!!
Next post பேய் படங்களில் நடிக்க ஆசைப்படும் திரிஷா..!!