மகனுக்கு ஏற்ற பெண்ணை தேடும் விக்ரம்..!!

Read Time:1 Minute, 44 Second

நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். தெலுங்கில் சூப்பர் ஹிட் ஆன ‘அர்ஜூன் ரெட்டி’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் துருவ் விக்ரம் நடிக்கிறார். பாலா இயக்கும் இந்தப் படத்திற்கு ‘வர்மா’ எனப் பெயர் வைத்துள்ளனர்.

இந்நிலையில் நடிகர் விக்ரம் தற்போது, இந்தப் படத்திற்கு கதாநாயகி தேடி வருகிறார். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். விக்ரம் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அவளைக் காணவில்லை. அந்த அவள் நீங்களாக இருப்பின், அவள் உங்களைப் போல இருப்பின் உங்கள் புகைப்படத்தையும், வீடியோவையும் [email protected] என்ற முகவரிக்கு அனுப்பி வையுங்கள். உங்களைச் சந்திப்பதற்கு நீண்ட காலம் காத்திருக்க முடியாது. கொஞ்சம் நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் வேகமாக அனுப்பி வையுங்கள்” என்று கூறியுள்ளார்.

பதிவோடு சேர்ந்து வீடியோ ஒன்றையும் நடிகர் விக்ரம் இணைத்துள்ளார். அந்த வீடியோவுக்கு ஸ்ருதிஹாசன் குரல் கொடுத்துள்ளார். சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். அவர்களுக்கு விக்ரம் நன்றி தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தீடீரென வந்த வெள்ளம்: தப்பி ஓடிய நாய்..!! (வீடியோ)
Next post இதய அறுவைசிகிச்சை செய்ய உகந்த நேரம்..!!