சென்னை போலீசாருக்கு விஷால் பாராட்டு…!!

Read Time:2 Minute, 12 Second

சென்னையில் சமீபத்தில் பெய்த மழையின் போது போலீசார் களத்தில் இறங்கி மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதற்காக நடிகர் விஷால் சென்னை போலீசாருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது முகநூல் பக்கத்தில் ‘நம்ம சென்னை… நம்ம போலீஸ்’ என்ற தலைப்பில் பதிவு செய்துள்ள அறிக்கை வருமாறு:-

சமீபத்தில் வடகிழக்கு பருவமழை பெய்தபோது சென்னையிலும், புறநகர் பகுதிகளிலும் பல குடியிருப்பு பகுதிகள் வெள்ளக் காடானது. பல அணைகளில் நீர் இருப்பு அதிகரித்துள்ளது. பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது.

இவ்வாறு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பலத்த மழை பெய்தபோது சில தன்னார்வலர்கள் களத்தில் இறங்கி பணி செய்தனர். துயரத்தில் இருந்த பொதுமக்களுக்கு உதவி அளித்தனர்.

கனமழையின் போது களத்தில் பணியாற்றிய போலீசாரை பாராட்டியே தீர வேண்டும். மழையால் தேங்கிய தண்ணீர் பல பகுதிகளிலும் வடிந்து விட்டது. மழைநீர் சூழ்ந்த அந்த நாட்களில் போலீசார் களத்தில் ஆற்றிய பணி பிற அரசுத்துறைகளுக்கு முன்மாதிரியாக இருந்தது.

அவர்கள் 24 மணி நேரமும் அயராது உழைத்தனர். இதற்காக சென்னை போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதனுக்கு எனது மனப்பூர்வ வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை போக்குவரத்து போலீசாரின் பங்களிப்புக்கும், தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை குழுவினரின் பங்களிப்புக்கும் நன்றி.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆற்றைக் கடப்பதற்கான தேர்தல் கூட்டு..!! (கட்டுரை)
Next post கதிரைகளை வைத்தே அற்புதமான சாதனை படைத்த மனிதன்..!! (வீடியோ)