என் குருநாதரே எனக்கு வில்லனாக அமைந்தது மகிழ்ச்சி: விஷால்..!!

Read Time:1 Minute, 56 Second

துப்பறிவாளன்’ படத்தைத் தொடர்ந்து ‘சண்டக்கோழி 2’ மற்றும் ‘இரும்புத்திரை’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் விஷால். இவ்விரண்டு படங்களையும் விஷால் தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார்.

மித்ரன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘இரும்புத்திரை’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் சமந்தா, அர்ஜுன் உள்ளிட்ட பலர் விஷாலுடன் நடித்து வருகிறார்கள்.

திரையுலகில் அர்ஜுனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் விஷால். தற்போது மீண்டும் அர்ஜுனுடன் நடித்து வருவது குறித்து விஷால் கூறிருப்பதாவது:

என்னுடைய திரையுலக வாழ்க்கையே ஒரு வட்டமாகத் தான் தெரிகிறது. நான் யாரிடம் முதலில் உதவி இயக்குநராக சேர்ந்து என் வாழ்க்கையின் முதல் ஊதியத்தை பெற்றோனோ அவரே எனக்கு வில்லனாக ‘இரும்புத்திரை’ படத்தில் நடிக்கிறார். ஆனால் இப்போதும் அவர் தான் எனக்கு குரு. அவர்தான் அர்ஜுன். இது ஒரு உயிரோட்டமான பயணம். நாங்கள் படத்தில் சந்தித்துக்கொள்ளும் காட்சிகள் அனைத்துமே ரசிகர்களை சீட் நுனிக்கே கொண்டு வரும். முக்கியமாக கிளைமாக்ஸில் நாங்கள் இருவரும் மோதிக்கொள்ளும் சண்டைக்காட்சி. எங்கள் இணையைக் காண காத்திருங்கள்’ என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ராசிபுரம் அருகே 4 கால்களுடன் அதிசய கோழிக் குஞ்சு..!!
Next post ஆற்றைக் கடப்பதற்கான தேர்தல் கூட்டு..!! (கட்டுரை)