ராசிபுரம் அருகே 4 கால்களுடன் அதிசய கோழிக் குஞ்சு..!!

Read Time:1 Minute, 24 Second

ராசிபுரம் அருகேயுள்ள சீராப்பள்ளி பேரூராட்சி 1-வது வார்டுக்கு உட்பட்ட சின்ன காக்காவேரி காட்டுக்கொட்டாயைச் சேர்ந்தவர் துரைசாமி, விவசாயி. இவரது மனைவி புஷ்பா.

இவர்கள் நாட்டுக் கோழி வளர்த்து வருகின்றனர். அதில் ஒரு கோழி முட்டை அடைக்காத்து வந்தது. நேற்று முன்தினம் இரவு அந்த முட்டைகள் உடைந்து கோழிக் குஞ்சுகளாக வெளியே வந்தன. மொத்தம் 17 கோழிக்குஞ்சுகள் முட்டையில் இருந்து வெளியே வந்தன. அதில் ஒரு கோழிக் குஞ்சு மட்டும் 4 கால்களுடன் காணப்பட்டது.

அதே சமயத்தில் அதிசயக் கோழிக் குஞ்சுக்கு மலம் கழிக்க இரண்டு அறைகள் இருந்தன. 4 கால்களுடன் காணப்பட்ட அந்த கோழிக்குஞ்சால் மற்ற கோழிக் குஞ்சுகளைப் போல் அங்கும் இங்கும் ஓட முடியவில்லை. மெதுவாகத்தான் நகர்ந்து செல்கிறது. இந்த அதிசயக் கோழிக்குஞ்சுவை அந்தப் பகுதியைச் சேர்ந்த பலரும் அதிசயத்துடன் பார்த்து சென்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குழந்தையின் வியக்க வைக்கும் செயல்! திகைப்பில் மூழ்கிய தாய்! வைரலாகும் காணொளி..!!
Next post என் குருநாதரே எனக்கு வில்லனாக அமைந்தது மகிழ்ச்சி: விஷால்..!!