கர்ப்பிணியின் கை, கால் தசைகளை வலுப்படுத்தும் உடற்பயிற்சி..!!

Read Time:3 Minute, 18 Second

வயிற்றில் குழந்தை வளர வளர கர்ப்பிணியின் உட்காரும் நிலை, நிற்கும் நிலை, படுக்கும் நிலை போன்றவை மாறும். அப்போது தசைகளில் வலி ஏற்படும். அந்த வலிகளைக் குறைக்க மாத்திரைகளை நாடிச் செல்வதைவிட, உடற்பயிற்சிகள் செய்வதுதான் மிகவும் நல்லது. உடற்பயிற்சிகள் கர்ப்பிணியின் கை, கால் தசைகளை வலுப்படுத்துவதால், நிற்பது, நடப்பது, எழுந்திருப்பது போன்ற செயல்கள் எளிதாகும்.

கர்ப்பத்தின் இரண்டாவது டிரைமஸ்டரிலிருந்து கருப்பை விரிந்து கொடுத்துக் கொண்டே இருப்பதால், கர்ப்பிணியின் அடிவயிறு, முதுகு மற்றும் கால் தசைகளில் அழுத்தம் அதிகமாகி, முதுகுவலி, கால்வலி, அடிவயிறு கனமாக இருப்பது போன்ற தொல்லைகள் தொடரும். இவற்றுக்கு உடற்பயிற்சிகள் மட்டுமே தீர்வு தரும்.

கர்ப்பத்தின்போது, குழந்தையின் உடல் தாயின் குடலையும் அழுத்துமல்லவா? அப்போது செரிமான நீர்கள் சுரப்பது குறைந்து மலச்சிக்கல் ஏற்படுவது வழக்கம். உடற்பயிற்சிகள் குடலின் செயல்திறனை மேம்படுத்தி, மலச்சிக்கலைக் குறைக்கும். கர்ப்பிணிகள் அடிக்கடி மலமிளக்கி மாத்திரைகளைச் சாப்பிடுவதைவிட அதற்கென உள்ள உடற்பயிற்சிகளைத் தேர்வு செய்துகொள்ள வேண்டும்.

கர்ப்பிணியின் உடல் எடையைப் பராமரிக்க சரியான உணவுத் திட்டத்துடன் முறையான உடற்பயிற்சித் திட்டங்களும் தேவைப்படும். கர்ப்ப காலத்தில் உடல் உற்சாகம் பெறுவதற்கு மட்டுமல்லாமல், உள்ளமும் உற்சாகமாக இருக்க வேண்டுமானால் உடற்பயிற்சிகளை மேற்கொள்வதே சிறந்த வழி.

கர்ப்பகால உடற்பயிற்சிகள் தசைகளுக்கு வலுவூட்டுவது மட்டுமல்லாமல், உறக்கத்தின்போது அவற்றின் இறுக்கத்தையும் தளர்த்திவிடும். மேலும், கர்ப்பிணிகளுக்கு இரவில் கெண்டைக்கால் தசைகள் இழுத்துக் கொள்வதைத் தவிர்த்துவிடும். இவற்றின் பலனால், இரவில் உறக்கம் நன்றாக வரும்.

உடற்பயிற்சிகள் முதுகுத் தசைகளையும் அடிவயிற்றுத் தசைகளையும் விரித்து வலுவாக்கி, கர்ப்பிணிக்கு சுகப் பிரசவம் ஆவதற்குத் தயார் செய்யும். பிரசவம் ஆனதும் பழைய உடலமைப்பைப் பெறுவதற்கும் உடற்பயிற்சிகள் உதவும். கர்ப்பிணியின் வயிறு பிரசவத்துக்குப் பின்னரும் பெருத்திருப்பதற்கு கர்ப்பகாலத்தில் உடற்பயிற்சிகளை மேற்கொள்ளாதது ஒரு காரணம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆண்கள் இந்த மாதிரி நேரத்தில் உடலுறவு கொள்ள கூடாதுனு தெரியுமா?..!!
Next post குழந்தையின் வியக்க வைக்கும் செயல்! திகைப்பில் மூழ்கிய தாய்! வைரலாகும் காணொளி..!!