மன அழுத்தத்தை குறைக்கும் நீல நிற மின்விளக்குகள்..!!

Read Time:1 Minute, 45 Second

மனம் அமைதியின்றி அலைபாயும்போது மன அழுத்தம் உருவாக காரணமாகிவிடுகிறது. மனம் நிம்மதியின்றி தடுமாறும்போது எதிர்மறை சிந்தனைகள் உருவாகி மனதை இறுக்கமாக்கிவிடும். மனஅழுத்தம் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு உலைவைத்து விடும். அதை கண்டுபிடித்து, சரியான சிகிச்சை எடுத்துக்கொள்ளாவிட்டால் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கி விடும்.

இந்நிலையில், மன அழுத்தத்தை குறைப்பதற்கு ஸ்பெயின் பல்கலைக்கழகம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அந்த ஆய்வின் முடிவானது நாளிதழில் வெளியிடப்பட்டது.

அந்த ஆய்வில் மன அழுத்தத்தை குறைக்கும் திறன் நீல நிற மின்விளக்குகளுக்கு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதற்காக 12 பேர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். பாதி பேர் வெள்ளை நிற விளக்குகளுக்கு கீழேயும், மீதி பேர் நீல நிற மின்விளக்குகளுக்கு கீழேயும் படுக்க வைக்கப்பட்டனர். அவர்களில் நீல நிற மின்விளக்குகளுக்கு கீழே உள்ளவர்களின் மன அழுத்தம் மிகவும் குறைந்து போனதாக நிரூபித்தனர்.

மன அழுத்தத்தை குறைக்க விரும்புவோர் இந்த முறையை மேற்கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சுவிஸ்வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான.. “அறிவுத்திறன் போட்டிகள்” -2018 (பேர்ண் மாநிலத்தில்)
Next post உயிரை பணயம் வைக்கும் சண்டைக்காட்சி- தீரன் ஸ்பெஷல்..!! (வீடியோ)